Nallakannu Health: கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. வயதுமூப்பு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தவறி விழுந்ததில் காயமடைந்தார். அப்போது, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Nallakannu health

மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதியும் மூச்சுத் திணறல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 8 ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், நல்லகண்ணுவுக்கு நேற்று இரவு மீண்டும் மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மூத்த மருத்துவர்கள் குழுவினர் கண்காணிப்போது, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+