நான் குடியிருந்த வீடு இடியும் தருவாயில் இல்லை.. நல்லகண்ணு தகவல்
சென்னை: நான் குடியிருந்த வீடு இடியும் தருவாயில் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.
நல்லகண்ணுவுக்கும் கக்கன் குடும்பத்தினருக்கும் பொது ஒதுக்கீட்டில் புதிய வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் கக்கன் குடும்பத்திற்கு வீடு ஒதுக்குவதாக தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். நான் குடியிருந்த வீடு இடியும் நிலையில் இருக்கிறது என்ற செய்தி தவறானது.
நீதிமன்ற உத்தரவை காட்டி வீடுகளை இடிக்க முடிவு செய்துவிட்டார்கள். வீடுகளை எப்போது ஒதுக்குகிறார்கள் என்பதை தெரிவித்த பிறகே அதுகுறித்து கருத்து கூற முடியும். பல ஆண்டுகளாக அங்கு குடியிருப்போரை வெளியேற்றக் கூடாது என்பதே எனது கோரிக்கை என்றார் நல்லகண்ணு.












Click it and Unblock the Notifications