"பாஜக, ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த சவுக்கடி..!" 'நாம் தமிழர்' சீமான் பரபர அறிக்கை
சென்னை : பேரறிவாளனது விடுதலை விவகாரத்தில், மத்திய அரசு இனியும் முடிவெடுக்கத்தவறினால் அரசியலமைப்புச் சாசனப்படி நாங்கள் விடுவிப்பதற்கு உத்தரவிடுவோமென உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பெரும் நம்பிக்கையைத் தருகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் விடுதலை அளிக்கக்கோரி அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்பும் ஆளுநர் எந்தவிதமான முடிவையும் எடுக்காமல் உள்ளார் எனவும் பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது.

பேரறிவாளன் வழக்கு
அப்போது ஆளுநரின் நடவடிக்கை குறித்து ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்த உச்சநீதிமன்றம், பேரறிவாளன் விடுதலை விவகரத்தில் அமைச்சரவை முடிவெடுத்தபின் ஆளுநர் முடிவெடுக்க அவசியமே இல்லை எனவும், பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்க முடிவெடுக்க காலதாமதம் ஏன்? இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது ஏன்? மத்திய அரசு முடிவை அறிவிக்கவில்லை என்றால் நாங்கள் முடிவை அறிவிக்க வேண்டியது இருக்கும். மேலும் இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்க போகிறோம் எனவும் கூறியது.

உச்ச நீதிமன்றம் சவுக்கடி
இந்நிலையில் பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் உச்ச நீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தம்பி பேரறிவாளனது விடுதலை விவகாரத்தில், மத்திய அரசு இனியும் முடிவெடுக்கத்தவறினால் அரசியலமைப்புச்சாசனப்படி நாங்கள் விடுவிப்பதற்கு, உத்தரவிடுவோமென உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பெரும் நம்பிக்கையைத் தருகிறது.

நாம் தமிழர் சீமான்
நியாயமும், நீதியும் பக்கமிருந்தும் அரசியல் தலையீட்டாலும், அதிகார முறைகேட்டாலும் இவ்வளவு ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு, தடுக்கப்பட்ட தம்பியின் விடுதலை இன்றைக்கு சாத்தியப்படவிருப்பது அளப்பெரும் மனமகிழ்வைத் தருகிறது. அரசியலமைப்புச்சாசனத்தைத் துளியளவும் மதியாது, கூட்டாட்சித்தத்துவத்தைக் கேலிப்பொருளாக்கி, சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்து வந்த ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு

ஒப்புதல் தர வேண்டும்
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் கருத்து அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் கொடுத்த சவுக்கடியாகவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இக்கூற்றைப் பார்க்கிறேன். ஆகவே, இனியும் தாமதிக்காது, 161வது சட்டப்பிரிவின்படி எழுவர் விடுதலைக்காக இயற்றப்பட்ட தமிழகச் சட்டமன்றத்தீர்மானத்திற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டுமென தமிழக ஆளுநரை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications