அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்! அழகப்பா கல்லூரி மாணவர் விடுதியில் தற்கொலை
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் சபரீஷ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ளது அழகப்பா டெக்னாலஜி கல்லூரி. அதாவது Alagappa College of Technology (ACT) ஆகும். இங்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சபரீஷ்வரன், லெதர் டெக்னாலஜி எனும் படிப்பை 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் இந்த கல்லூரியில் படிக்க தனக்கு பிடிக்கவில்லை என கூறிவந்தாராம். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவ்வாறு கூறி வந்த நிலையில் தற்போது விடுதியில் இருந்த அந்த மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த கல்லூரி நிர்வாகம், கோட்டூர்புரம் போலீஸுக்கு தகவல் அளித்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சபரீஷ்வரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கல்லூரியில் படிக்க பிடிக்கவில்லை என்பதால் அவர் தற்கொலை செய்ததாக முதற்கட்ட தகவல் கிடைத்தது.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications