முகிலன் மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம் இருக்கு.. நிரூபிப்பேன்.. பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேட்டி
Recommended Video

சென்னை: முகிலன் மீதான பாலியல் புகாரை ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
சமூக செயற்பாட்டாளர் முகிலன். இவர் ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட நாள் முதல் காணாமல் போனார்.
இதனிடையே, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது பெண், கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் மீது கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் அளித்திருந்தார்.

ஆசை வார்த்தை
அந்த புகாரில் முகிலனுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் போராட்டத்தில் அவருடன் இணைந்து பங்கேற்றேன். அப்போது அடுத்த நாள் இருவரும் ஒரு விடுதியில் தங்கிய போது என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார்.

ஆந்திர போலீஸால் மீட்பு
இது போல் பல முறை என்னை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் முகிலன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆந்திர போலீஸாரால் மீட்கப்பட்டார்.

நீரூபிப்பேன்
இதையடுத்து அவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் இந்த வழக்கு சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. பாலியல் வழக்கில் முகிலனுக்கு எதிரான ஆதாரங்கள் காட்டி அவர் மீதான குற்றத்தை நிரூபிப்பேன் என்றார்.

ஜோடிப்பு
எனினும் இந்த புகாரை முகிலனும் , அவரது மனைவி பூங்கொடியும் மறுத்துள்ளனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக குரல் கொடுப்பதால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற பொய்யான புகார்கள் ஜோடிக்கப்பட்டுள்ளன என முகிலனும் பூங்கொடியும் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications