சென்னை வடபழனியில் ''மாண்டலின் ஸ்ரீநிவாஸ்'' பெயரில் சாலை! மறைந்த இசைக்கலைஞரை கவுரவித்த முதல்வர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வடபழனி குமரன் காலனி சாலைக்கு மறைந்த இசைக்கலைஞர் ''மாண்டலின் ஸ்ரீநிவாஸ்'' பெயர் சூட்டப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

பிரபல இசைக் கலைஞரான மாண்டலின் ஸ்ரீநிவாஸ் கடந்த 2014ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக 45 வயதிலேயே காலமானார். கல்லீரல் பிரச்சனை காரணமாக பல ஆண்டுகளாக அவர் அவதிப்பட்டு வந்த போதும், மாண்டலின் கருவியை இசைக்க அவர் தவறியதில்லை.

 naming of Chennai Vadapalani Kumaran Colony Road after late musician Mandolin Srinivas

கல்லீரல் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டும் அவருக்கு அது பலன் தரவில்லை. மாண்டலினை பொறுத்தவரை அது மேற்கத்திய கருவி என்றாலும் கூட, அதில் கர்நாடக இசையை இசைக்கும் ஆற்றல் பெற்றவராக திகழ்ந்தார் மாண்டலின் ஸ்ரீநிவாஸ். 6 வயது முதல் மாண்டலின் வாசித்து வந்த ஸ்ரீநிவாசுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அவர் மறைந்து ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், மாண்டலின் ஸ்ரீநிவாஸை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பெயர் சென்னை வடபழனி குமரன் காலனிக்கு சூட்டப்பட்டுள்ளது. இதற்காக மறைந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸின் தந்தை சத்தியநாராயணா மற்றும் தம்பி மாண்டலின் ராஜேஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

 naming of Chennai Vadapalani Kumaran Colony Road after late musician Mandolin Srinivas

சென்னையில் பல்வேறு சாலைகளுக்கு மறைந்த ஆளுமைகள் பெயரில் புதிய பெயர்களை சூட்டுவதில் அரசு தீவிரமாக இருக்கிறது. இதன் மூலம் மறைந்த ஆளுமைகளை மக்கள் மறக்காவண்ணம் அவர்களை கவுரப்படுத்த முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+