தவெக அலுவலகம் பிரம்மாண்டம்! அண்ணா அறிவாலயம் சுடுகாடு! நாஞ்சில் சம்பத் கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக அலுவலகம் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆனால் அண்ணா அறிவாலயம் சுடுகாடு போல் இருக்கும் என தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் கூறிய கருத்து திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Anna Arivalayam

திமுக, மதிமுக, அதிமுக, தினகரன் ஆதரவு, திமுக ஆதரவு என பயணித்த திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத், திமுக ஆதரவாளராக இருந்து வந்தார். பின்னர் கடந்த சில நாட்களாக விஜய்க்கு ஆதரவாக பேசி வந்தார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தவெகவில் இணைந்தார். தினகரன் ஆதரவாளராக இருந்த போது அவர் அமமுக எனும் கட்சியை தொடங்கினார். அதில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினார்.

நாஞ்சில் சம்பத்

இப்படிப்பட்ட கொள்கையை உடைய நாஞ்சில் சம்பத், தற்போது தவெகவில் இணைந்தது பேசுபொருளானது. இந்த நிலையில் தவெகவில் இணைந்த கையோடு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: நான் உங்கள் ஃபேன் என விஜய் கூறியதும் எனக்கு மெய்சிலிர்த்துப் போனேன்.

பெரியார், அண்ணா

கடந்த 6 ஆண்டுகளாக நான் எந்த கட்சியிலும் இல்லை. பெரியார், அண்ணா லட்சியங்களை பேசி வந்த நான் இன்று தவெகவில் இணைந்துள்ளேன். நாடு முழுவதும் பரப்புரை செய்ய விஜய் எனக்கு அனுமதி தந்துள்ளார். ஒரு டிவி டிபேட்டில் விஜய் சரியான பாதையில் பயணிக்கிறாரா என கேட்டனர். அதற்கு ஆம் என்றேன். அது முதல் எனக்கு அறிவாயலத்தில் இருந்து பிரச்சினைகள் வந்தன.

அறிவுத் திருவிழா

திமுக நடத்திய அறிவுத் திருவிழாவில் வேண்டுமென்றே என்னை தவிர்த்தார்கள். நான் திமுகவிடம் எதையும் கேட்டு நின்றதில்லை. அப்படியே கேட்டாலும் சைக்கிள் கூட கிடைக்காது.

உச்சநீதிமன்றம்

பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை கொள்கைத் தலைவர்களாக விஜய் வைத்துள்ளார். கரூர் வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிட்டதைத் தொடர்ந்து அது விஜய்க்கு கிடைத்த வெற்றி என தெரிவித்திருந்தேன்.

வசை சொற்கள்

அந்த நிமிடத்தில் இருந்து காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கான வசை சொற்களால் என்னை அறிவாலயத்தில் இருந்து வசைபாடினார்கள். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு புத்தக வெளியீட்டு விழா, அறிவு திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தார்கள். துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழாவுக்கு ஒரு திங்கள் முன்னே என்னிடம் தேதி வாங்கினார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சியில் கரு. பழனியப்பன் என்னை மேடையிலேயே நக்கல் அடித்தார்.

குறைத்து பேசிய சுப.வீ

திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீ, திமுக மேடையிலேயே என்னை குறைத்துப் பேசினார். நான் மனதளவில் உடைந்துபோனேன். நான் அவர்களிடத்தில் ஒன்றும் கேட்கவில்லை. கேட்டாலும், ஒரு சைக்கிளும் கூட கொடுக்கமாட்டார்கள். என் வயிற்றில் அடிப்பதுபோல், என் நிகழ்ச்சிகளை ரத்து செய்து என் வயிற்றில் அடித்தது எனக்கு மன வேதனை கொடுத்தது என பேசியிருந்தார்.

சுடுகாடு

இந்த நிலையில் ஒரு சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் "தவெக அலுவலகம் பிரம்மாண்டமாக உள்ளது. ஆனால் அறிவாலயம் சுடுகாடு போல் இருக்கும். தவெக அலுவலகத்தில் 400-க்கும் மேற்பட்ட தம்பிகள் லேப்டாப் வைத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

234 தொகுதிகள்

234 தொகுதிகளில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்? அவற்றில் எத்தனை பெண்கள்? எத்தனை ஆண்கள்? என அனைத்து லிஸ்ட்டையும் எடுத்து வைத்துக் கொண்டு நாளைக்கே தேர்தல் வந்தாலும் அவர்கள் களம் காண தயாராக உள்ளனர். திமுகவை விட தவெகவின் தேர்தல் பணிகள் பிரமாதமாக உள்ளது. தொழில்நுட்பரீதியாக தவெகவினர் செயல்பாடுகளை பார்த்து நான் ஆச்சரியப்பட்டு போனேன்" என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். திமுகவின் அண்ணா அறிவாலயத்தை சுடுகாடு என நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளதற்கு திமுகவினர் கொந்தளித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+