தூக்கி அடிச்சாரே ஜெ.. உங்க கடந்த காலம் என்ன.. யோசிச்சு பாருங்க.. முனுசாமிக்கு நாஞ்சில் சம்பத் கொட்டு

கேபி முனுசாமி அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என நாஞ்சில் சம்பத் கூறுகிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "முனுசாமி அரசியலில் இல்லாமல் இருந்தாலே, ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைந்துவிடும்" என்று நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாகவே சசிகலா தன்னுடைய தனது ஆதரவாளர்களிடம் பேசும் ஆடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன..

ஆடியோக்களை வெளியிடுபவர்கள் யார்? எதற்காக வெளியிடுகிறார்கள்? பின்னணி என்ன? யாருக்கு குறி வைத்து இந்த ஆடியோ வெளியாகி கொண்டிருக்கிறது என்றெல்லாம் தெரியவில்லை.

சசிகலா

சசிகலா

ஆனால் சசிகலாவின் ஒவ்வொரு ஆடியோவும் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இந்த ஆடியோ தொடர்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் கூடி ஆலோசனையும் நடத்தினர்.. பேட்டிகளையும் தந்தனர். அந்த வகையில், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கேபி முனுசாமியும் பேட்டி தந்தார்.

முனுசாமி

முனுசாமி

அதில், "அதிமுக கட்சியில் சசிகலா இல்லை... அவருக்கும் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது... அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் கருத்துக்களை சொல்லி வருகிறார்.,, அதிமுக என்கிற பேரியக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்கள் பாதுகாத்து வருகிறார்கள்.

அம்மா

அம்மா

எனவே, தொண்டர்கள் யாரும் சசிகலாவின் கருத்துக்கு செவி சாய்க்க மாட்டார்கள்... அதிமுக தொண்டர்கள் யாரும் அவருடன் பேசவில்லை... சசிகலா தான் ஃபோன் போட்டு பேசுகிறார்.. குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி இது... அவருடன் இருக்கும் சிலர் அவரை தூண்டிவிடுகின்றனர். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமானால் சசிகலா அமைதியாக இருக்க வேண்டும்" என்றார்.

 நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத்

இந்நிலையில், முனுசாமியின் இந்த பேச்சு குறித்து, திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் நக்கீரன் வார இதழ் கருத்து கேட்டுள்ளது.. அதில், நாஞ்சில் சம்பத் சொன்னதாவது: "ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய வேண்டுமானால் முனுசாமி அரசியலில் இருந்து விலக வேண்டும். ஏனென்றால், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இந்த முனுசாமியை தூக்கி வெளியே வீசினார்.

 சசிகலா

சசிகலா

ஆறு இலாகாக்களை வைந்திருந்த மந்திரி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இலாகாவிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அறிக்கை வருகிறது. 7வது நாள் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். 8வது நாள் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்... ஜெயலலிதா ஆன்மா இவர் பக்கமா இருக்கிறது... இவர் அரசியலிலேயே இருக்க கூடாது. சசிகலாவை பற்றி சொல்வதற்கு முன்பு முனுசாமி தன்னுடைய கடந்த காலத்தை கொஞ்சமாவது யோசிக்க வேண்டும்" என்று நாஞ்சில் சம்பத் சொல்லி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+