"பச்சை துரோகம்".. பிளானே இதுதான்.. காரணமே பாஜகதான்.. சபையில் போட்டுடைத்த நாஞ்சில் சம்பத்
எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக விமர்சித்து பேட்டி தந்துள்ளார் நாஞ்சில் சம்பத்
சென்னை: அவமதிக்கப்பட்டிருக்கிறார் ஓபிஎஸ்.. திட்டமிட்டு அவமானப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு பின்னால் பிஜேபி கட்சியின் விளையாட்டு இருக்கிறது என்று நாஞ்சில் சம்பத் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.. பரபரப்பாக கூடிய அடுத்த சில நிமிடங்களிலேயே, கூட்டப்பட்ட பொதுக்குழு கலைந்தது..
அதிமுகவில் நடந்துவரும் அதிகார மோதல் தமிழக அரசியல் களத்தையே பரபரப்பாகியுள்ளது... அதிமுக தலைவர்களுக்குள்ளேயே விமர்சனங்கள் வெடித்து வந்த நிலையில், மாற்று கட்சியினரும், அதிமுகவை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.

திருநாவுக்கரசு
காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசு, ஒற்றை தலைமை மட்டுமே ஒரு கட்சிக்கு தேவை என்பதை வலியுறுத்தியிருந்தார்.. இப்போது, திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத், ஓபிஎஸ்ஸுக்கு நேரடியாகவே சப்போர்ட் செய்து, எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து வருகிறார்.. ஒரு யூடிப் சேனலுக்கு அவர் தந்த பேட்டியில் சொன்னதாவது:

பச்சை துரோகம்
"எடப்பாடி பழனிசாமி என்பவர் ஒரு துரோகத்தின் அடையாளம்.. ஆளுமையும் அற்ற அவர் பணத்தைக் கொடுத்து பதவிகளை வாங்க முடிவு செய்துவிட்டார்.. காட்டுமிராண்டிக் கூட்டம் என்ற பெயரை எடுத்துள்ளது அதிமுக.. கொஞ்சம் கூட குற்ற மனப்பான்மை இல்லாமல், சரியோ தவறோ சட்டப்படி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்தான்..

வெட்டவெளிச்சம்
ஆனால் அவர் வரும்போது அவரை கேலி பேசி கிண்டல் செய்து எள்ளி நகையாடி உள்ளனர்.. இது மிகவும் தவறு. எடப்பாடி பழனிசாமி என்ற இடைச்செருகல் வருகிறபோது,வழிநெடுக வரவேற்பு கொடுத்து டான்ஸ் ஆடி, அவரை பொதுக்குழு மேடையில் கொண்டுவந்து நிறுத்தியதன் மூலம் இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்பது வெட்டவெளிச்சமாகிறது.. ஓபிஎஸ்ஸை அவமதிக்க வேண்டும் என்பதே அவர்களது திட்டம், அதையும் நிறைவேற்றி விட்டார்கள். ஓபிஎஸ்ஸுக்கு இப்படி ஒரு நெருக்கடியான நிலை வந்திருப்பதை நினைத்து கவலை கொள்கிறேன்...

மெரிட்
ஆயிரம் தான் இருந்தாலும் ஓபிஎஸ்சின் கட்டளைக்காக ஒரு காலத்தில் காத்திருந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி, கூவத்தூர் கூத்தில் மிதந்தவர்தானே எடப்பாடி பனிச்சாமி, இவர் என்ன மெரிட்டில் வந்தவரா? அதிமுகவிற்கு தலைமை தாங்குவதற்காக ஏதாவது ஒரு அடிப்படைத் தகுதி எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளதா? ஓபிஎஸ்ஸுக்கு வந்த நிலைமை, நாளை எடப்பாடிக்கும் வரும்" என்று கூறியிருந்தார். இதனிடையே செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் பேசும்போதும், எடப்பாடியை குறி வைத்து பேசினார்.
Recommended Video

பிளான் - லாஜிக்
"ஒரு அநீதியை நேற்றைய தினம் அரங்கேற்றி உள்ளனர்.. ஒரு இடைச்செருகலாக வந்தவர், 10 ஆண்டுகாலத்தில் கொள்ளையடித்த பணத்தை வைத்து, அதிமுக என்ற விளிம்புநிலை மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சி, குத்தகைக்கு எடுத்திருக்கிறார்... அவமதிக்கப்பட்டிருக்கிறார் ஓபிஎஸ்.. திட்டமிட்டு அவமானப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு பின்னால் பிஜேபி கட்சியின் விளையாட்டு இருக்கிறது என்பதை நாடு புரிந்துகொண்டுள்ளது. இன்று மராட்டியத்தில் செய்யும் வேலையை தமிழ்நாட்டில் அவர்கள் செய்வார்கள்.. செல்வாக்கு உள்ள ஒரு கட்சியை உடைப்பதும், உருக்குலைப்பதும், ஊடுருவுவதும், பிஜேபியின் லாஜிக் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications