தம்பி உதயநிதிக்கு ஏணியாகவும் இருப்பேன்.. தோனியாகவும் இருப்பேன்.. கலகலத்த நாஞ்சில் சம்பத்
சென்னை: திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்படும் பொய் பெட்டி என்ற நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத், ஒரு புதிய அத்தியாயத்தை தம்பி உதயநிதி படைப்பார் என்றால், அவருக்கு ஏணியாகவும் இருப்பேன், தோனியாகவும் இருப்பேன் என்றார்.
திமுக இளைஞரணி சார்பில் பொய் பெட்டி என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில் அவ்வப்போது விருந்தினர்களாக திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் பங்கேற்று பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் அண்மையில் நடந்த பொய் பெட்டி நிகழ்ச்சியில் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ஒரு புதிய அத்தியாயத்தை தம்பி உதயநிதி படைப்பார் என்றால், அவருக்கு ஏணியாகவும் இருப்பேன், தோனியாகவும் இருப்பேன் என்றார்.
தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத், பந்தை அவருக்கு போட்டுள்ளேன். இனி அவர் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றார். அதற்கு பதில் அளித்த உதயநிதி, திமுக கரை வேட்டியை கையில் கொடுத்து, இதை போட்டுக்கொள்வது போட்டுக்காதது உங்கள் விருப்பம். பந்து இப்போது உங்கள் கோட்டில் உள்ளது என்றார். அதை கேட்டு அங்கிருந்த அன்பில் பொய்யாமொழி உள்பட திமுகவினர் விழுந்து விழுந்து சிரித்தனர்.
#பாெய்ப்பெட்டி_நிகழ்ச்சியில் ...
— C Veeraiyan Veera (@CVeeraiyanVeer1) January 24, 2020
அண்ணன்_நாஞ்சில்_சம்பத் மற்றும்
அண்ணன்_உதயநிதிஸ்டாலின் அவர்கள் @mkstalin @KanimozhiDMK@Udhaystalin@NanjilPSampath @Anbil_Mahesh pic.twitter.com/PfbeQQ42rO
தொடர்ந்து பேசிய உதயநிதி எனக்கு பொன்னாடை போர்த்துவதில் பெரிய உடன்பாடு இல்லை. கரை வேட்டியை போட்டுக்கொள்வது தான் பெருமையாக நான் நினைக்கிறேன் என்றார்.
இதனிடையே நாஞ்சில் சம்பத் அடிக்கடி கட்சி மாறியதை விமர்சித்தும், அவர் திமுகவினரை விமர்சித்தும் முன்பு பேசிய வீடியோக்களை போட்டு நாஞ்சில் சம்பத்தை டுவிட்டரில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications