இந்து பெண்களை இழிவுபடுத்தும் மனு? வார்த்தையை விட்ட நாராயணன்! மாட்டிகிட்டீங்களே.. திருமா பக்கா மூவ்!
சென்னை: நேற்று விசிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்கள் அச்சிட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டது. பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி விசிகவின் இந்த செயலை விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் மனுஸ்மிருதி தொடர்பான விவாதங்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. பாஜகவினர் பலர் மனுஸ்மிருதிக்கு ஆதரவாக பேசுவது பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
முக்கியமாக திமுக எம்பி ஆ ராசா மனுஸ்மிருதியை கடுமையாக தாக்கி விமர்சனம் வைத்து சமீபத்தில் பேசி இருந்தார். இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். உச்ச நீதிமன்றம் சொல்கிறது இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.

மனுஸ்மிருதி
மனுஸ்மிருதியும் அதைத்தான் சொல்கிறது. சொந்த மதத்திற்கு உள்ளேயே ஏற்றத்தாழ்வு பார்க்கும் மதம்தான் இந்து மதம். இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சனாதனம் குறித்தும் மனுஸ்மிருதி குறித்தும் பல்வேறு விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தது. பாஜகவினர் பலர் இதற்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து பேசி வந்தனர். இந்து மதத்தில் மனுஸ்மிருதி முக்கியமாக புத்தகமாக பார்க்கப்படுகிறது. இதுதான் இந்துத்துவா சித்தாந்தங்களை பேசக் கூடியது. ஜாதி ரீதியிலான வர்ண பேதங்கள், ஆண் பெண் என்கிற பாலின பேத கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

இந்து மதம்
இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் புத்தகமாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜக இந்த புத்தகத்தை தூக்கி பிடிப்பதை விசிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பெண் விடுதலைக்கும், ஜாதி எதிர்ப்பிற்கு, மனித உரிமைகளுக்கும் எதிராக இருக்கும் இந்த புத்தகத்தின் நகலை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் குறிப்பிட்டு இருந்தார். அதன்படியே நேற்று தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களுக்கு இந்த புத்தகத்தை இலவசமாக வழங்கினர்.

விமர்சனம்
பொது இடங்களில் மக்களிடம் இலவசமாக இதன் தமிழ் பிரதியை கொடுத்தனர். சூத்திரர்கள் என்பவர் விபச்சாரிகளின் மகன் என்கிற கருத்தை வலியுறுத்துகிறது மனுஸ்மிருதி என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கொலை செய்தால் பிராமணர்கள் தலை முடியை மட்டுமே வெட்ட வேண்டும், அவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும், அவர்களை தண்டிக்க கூடாது என்றெல்லாம் சட்டங்களை இது கொண்டு உள்ளதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

விசிக
இந்த நிலையில்தான் நேற்று விசிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மனுஸ்மிருதிகளை அச்சிட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் பொதுமக்களுக்கு தொல். திருமாவளவன் இந்த புத்தகங்களை வழங்கினார். இதை பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார். அதில், ஹிந்து பெண்களை இழிவுபடுத்தும் புத்தகத்தை அச்சடித்து வெளியிட்டு பொது வெளியில் விநியோகம் செய்யும் தொல். திருமாவளவனை கைது செய்ய உத்தரவிட வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலினுக்கு நாராயணன் கோரிக்கை வைத்து உள்ளார்.

நாராயணன் திருப்பதி
இந்த நிலையில்தான் நாராயணன் திருப்பதியை திமுக ஆதரவு நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். நீங்களே இப்படி ஒப்புக்கொண்டு வீட்டிர்களே.. மனுஸ்ம்ரிதி இந்து பெண்களை இழிவு படுத்துதுன்னு ஒப்புக்கொண்டதற்கு நன்றி. அடுத்ததா புராணங்கள்ல பெண்களையும் சூத்திரர்களையும் பத்தி என்ன எழுதியிருக்குன்னு அச்சடிச்சு கொடுக்குற பிளான் இருக்கு. அந்த நேரத்துல ஒப்பாரி வைக்க கொஞ்சம் கண்ணீரை மிச்சம் வைக்கவும், என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications