இல்லாத இந்தி திணிப்பை புகுத்தி அக்கப்போரை திணிக்காதீர்கள்.. முதல்வருக்கு பாஜக பதிலடி
சென்னை: இந்தி திணிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கு பாஜக மாநில தலைவர் நாராயணன் திருப்பதி பதில் அளித்துள்ளார்.
இந்தி திணிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு ஒற்றுமையைக் காத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மொழி என்பது மனிதனை அடையாளப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். மொழி தானும் வளர்ந்து, தன்னைப் பயன்படுத்தும் மனிதனையும் வளர்க்கும் தனியாற்றல் பெற்றது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எண்ணத்தின் வடிவமாகவும் நாகரிகத்தின் சின்னமாகவும் திகழும் மொழி, மனிதகுலத்தின் கருத்துப் பரிமாற்றத்தை செய்வதோடு மனித சமுதாய இணைப்புக்கும் துணை செய்கின்றது. உலக அறிஞர்களால் போற்றிப் பாராட்டப்படும் தமிழ், தமிழகத்தின் ஆட்சி மொழியாகும். செம்மொழியான தமிழ் மொழி, நீண்ட பாரம்பர்யத்தைக் கொண்ட தொன்மையான மொழியாகும்

கட்டாய இந்தி
கட்டாய இந்தியைப் புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் என்றும், ஒன்றிய அரசு ஒற்றுமையைக் காத்திட வேண்டும் என்றும் அறிக்கை விடுத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்றைக் கட்டாயமாக்க முயல்வது என்பது இந்தியை பேசுபவர்கள் மட்டுமே, இந்தியக் குடிமக்கள் என்பது போல தோன்றுகிறது.

இந்தியாவின் பிற மொழிகள்
இந்தியாவின் பிற மொழிகளை பேசுவோர், இரண்டாந்தர குடிமக்கள் என்பது போல தோன்றச் செய்கிற பிரித்தாளும் தன்மையைக் கொண்ட கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்தித் திணிப்பை தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் உட்பட அவரவர் தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்தவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று, தனது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை காணும்
வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை சரிசமாக நடத்திட வேண்டும். அனைத்து பிரந்திய மொழிகளும், மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், அதற்கு நேர் எதிராக மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து இந்தியை திணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியை கட்டாயமாக்க முயற்சி
இந்தியை கட்டாயமாக்க முயன்று, இந்தி திணிப்பு என்ற கொள்கையால், மற்றுமொரு மொழிப்போரை திணித்திட வேண்டாம் என்றும், இந்தி மொழியை கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்தியாவின் ஒற்றுமைச் சுடரை காத்திட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்டாய இந்தி
இந்த நிலையில் கட்டாய இந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறியதை மேற்கோள்காட்டிய பாஜக நாராயணன் திருப்பதி, இல்லாத ஹிந்தி திணிப்பை புகுத்தி இன்னொரு அக்கப்போரை திணிக்காதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications