தமிழ்நாட்டிற்கு ‘ஜாக்பாட்’.. 3 புதிய அம்ரித் பாரத் ரயில்கள்.. இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
சென்னை: தமிழ்நாடு - மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி திருச்சி, தாம்பரம் சந்திரகாச்சி, நாகர்கோவில் - ஜல்பாய்குரி ஆகிய 3 வழித்தடங்களில் புதிதாக அம்ரித் பாரத் ரயில்கள் புதிதாக இயக்கப்படவுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக அசாம் மற்றும் மேற்கு வங்கம் செல்கிறார். அப்போது ஹவுரா மற்றும் கவுகாத்தி இடையே இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமர் மேலும் நான்கு புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

நியூ ஜல்பைகுரி - நாகர்கோவில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், நியூ ஜல்பைகுரி - திருச்சிராப்பள்ளி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், அலிபுர்துவார் - எஸ்எம்விடி பெங்களூர் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் அலிபுர்துவார் - மும்பை (பன்வெல்) அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு - மேற்கு வங்கம் இடையே புதிதாக 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. மேற்கு வங்காள மாநிலம் ஜல்பாய்குரி திருச்சி, தாம்பரம் சந்திரகாச்சி, நாகர்கோவில் ஜல்பாய்குரி இடையே வாராந்திர ரயில்களாக இயக்கப்பட இருப்பதாக தெரிவித்திருந்தது. அந்த வகையில், தமிழ்நாட்டை இணைக்கும் 3 அம்ரித் பாரத் ரயில் சேவை இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் ரங்கபாணி ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுக்கான 3 அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 7 அம்ரித் பாரத் உட்பட 11 புதிய ரயில் சேவைகள் இன்று தொடங்கப்படுகின்றன. மேற்கு வங்கத்தின் மால்டாவில் ரூ.3,250 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
நாகர்கோவில் - ஜல்பாய்குரி அம்ரித் பாரத் ரயில் (வண்டி எண்-20604) இன்று மதியம் 1.45 மணிக்கு மேற்கு வங்காள மாநிலம் ரங்கபாணி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 19 ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.
வழித்தடம்: கரக்பூர், புவனேஸ்வர், விசாகப்பட்டினம், விஜயவாடா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.
ஜல்பாய்குரி -திருச்சி இடையிலான அம்ரித் பாரத் ரயில் (20610) இன்று மதியம் 1.45 மணிக்கு ஜல்பாய்குரியில் இருந்து புறப்பட்டு 19-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு திருச்சி வந்தடையும்.
வழித்தடம்: கரக்பூர், புவனேஸ்வர், விசாகப்பட்டினம், விஜயவாடா, சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தாம்பரம் சந்திரகாச்சி இடையிலான அம்ரித் பாரத் ரயில் (16107) நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.45 மணிக்கு சந்திரகாச்சியில் இருந்து புறப்பட்டு 19-ந்தேதி மாலை 6.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
வழித்தடம்: கரக்பூர், புவனேஸ்வர், விசாகப்பட்டினம், விஜயவாடா, சென்னை எழும்பூர்,
3 புதிய அம்ரித் பாரத் ரெயில்களுக்கான வழக்கமான ரயில் இயக்க சேவை குறித்த அறிவிப்புகள் தனித்தனியாக வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications