சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மொத்தம் 3 மணி நேரம்.. சென்னையில் மோடி சூறாவளி பயணம்.. வெளியான 'ஷெட்யூல்'

Google Oneindia Tamil News

சென்னை: பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் 3 மணிநேரம் மட்டுமே இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலை 7.50 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்படும் பிரதமர் மோடி காலை 10.35 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளார். காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 11.15 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தருவார்.

Narendra Modi will arrive in Tamil Nadu on February 14 and will stay 3 hours

அங்கு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்து, அடிக்கல் நாட்டவுள்ளார். மதியம், 12.35 முதல் 12.50 வரை ஒய்வெடுக்கும் பிரதமர், 12.55 மணிக்கு மக்களை சந்தித்தவாறு விமான நிலையம் செல்லவுள்ளார். அங்கிருந்து கொச்சிக்கு அவர் செல்கிறார்.

பிரதமரின் முதல் நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் அரசு விழாவாக நடைபெறுமாம். அப்போது ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 'அர்ஜுன் மார்க்-2' என்னும் புதிய வகை பீரங்கியை மோடி அறிமுகம் செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது.

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் சேவையையும், தமிழகத்தில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கவுள்ளார்.

பிரதமர் வருகையொட்டி சென்னையில் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

English summary
According to reports, Prime Minister Narendra Modi will arrive in Tamil Nadu on February 14 and will stay in Chennai for only 3 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X