Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போற இடமெல்லாம் அராஜகம், கொலை மிரட்டல்.. குவிந்த புகார்கள்.. நாடோடி பழங்குடியின பெண் அஸ்வினி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமல்லபுரத்தில் நாடோடி பழங்குடியினத்தை சேர்ந்த சக பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அஸ்வினி கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி நரிக்குறவ குடியிருப்பை சேர்ந்தவர் அஸ்வினி. இவர் கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் தங்கள் சமூகத்தினருடன் அன்னதானம் சாப்பிட சென்றார்.

 Narikurava Woman Ashwini arrested by Mamallapuram police

அப்போது அவர் கோயில் நிர்வாகிகளால் அவமதிக்கப்பட்டதாக வீடியோவில் அவரே புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த கோயிலுக்கு சென்ற அமைச்சர் பிகே சேகர் பாபு அந்த பெண்ணுடனும் மற்ற நரிக்குறவ சமூகத்தினருடனும் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.

இதையடுத்து கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது நரிக்குறவர்கள் வசிக்கும் பூஞ்சேரி பகுதிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு அவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் அஸ்வினியின் வீட்டுக்கும் சென்று அவரை திக்குமுக்காட வைத்தார். இந்த நிலையில் நரிக்குறவ பெண் அஸ்வினி மீது புகார்கள் எழுந்தன.

அதாவது தான் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டப்பட்டவர் என கூறி மாமல்லபுரத்தில் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு டிபன் கடைக்கு சென்று ரூ 10 க்கு சப்பாத்தி, பரோட்டா கேட்டு மிரட்டுவதாகவும் கொடுக்க முடியாது என கூறிய உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டியதாகவும் புகார்கள் எழுந்தன. உணவு சரியில்லை என்றால் முதல்வரிடம் சொல்லிவிடுவதாகவும் தான் சொன்னால் அதிகாரிகள் உடனே வந்துவிடுவார்கள் என்றும் மிரட்டினாராம். அது போல் கிழக்கு ராஜ வீதியில் உள்ள மருந்து கடையிலும் மருந்து சரியில்லை, உன் கடையை காலி செய்கிறேன் என அவர்களுடன் தகராறில் அஸ்வினி ஈடுபட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த வாக்குவாதம் சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளதாக மருந்து கடை உரிமையாளர் கூறுகிறார்.

மேலும் அதே பகுதியில் ஒரு பேக்கரி கடையில் கேக் வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் போன போது உரிமையாளர் காசு கேட்டதற்கு கேக் நல்லாவே இல்லை என கூறி தகராறு செய்ததாக தெரிகிறது. இதே போல் மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள டீ கடையிலும் டீ சரியில்லை என கூறி காசு கொடுக்காமல் அஸ்வினி அராஜகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

முதல்வரின் பெயரை கூறி அஸ்வினி அராஜகம் செய்வதாக வியாபாரிகள் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து அஸ்வினி கூறுகையில் எங்களை தீண்டதகாதவர்களாகவே பார்க்கிறார்கள். நாங்கள் சாப்பிட்ட தட்டை கழுவி கொடுக்க சொல்கிறார்கள். ஆனால் மற்றவர்கள் சாப்பிட்ட தட்டை ஹோட்டல்காரர்களே கழுவுகிறார்கள். இதை நான் தட்டி கேட்டேன். அதற்கு உன் வீட்டில் சாப்பிட்டிருந்தாலும் நாங்கள் உங்களை ஒதுக்கித்தான் வைப்போம் என கூறுவதாக அஸ்வினி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மாமல்லபுரத்தில் சுற்றுலா சீசன் களைகட்டியுள்ளது. அங்கு நாடோடி பழங்குடியின சமூகத்தினர் ஊசிமணி, பாசிமணி விற்று வருகிறார்கள். அவ்வாறு விற்பனை செய்த போது நந்தினி என்ற பெண்ணுடன் அஸ்வினி தகராறு செய்ததாக தெரிகிறது. இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியபோது தனது கையில் இருந்த கத்தியை எடுத்து நந்தினியின் கையில் கிழித்ததாக புகார் அளித்துள்ளார். நந்தினியின் புகாரின் பேரில் அஸ்வினியை மாமல்லபுரம் போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து அஸ்வினியிடம் கேட்ட போது தனது வீட்டிற்கு முதல்வர் வந்து சாப்பிட்டுவிட்டு சென்றதால் நான் பிரபலமாகிவிட்டேன் என்ற காழ்ப்புணர்ச்சியால் என் மீது இப்படியெல்லாம் பழிச் சுமத்துகிறார்கள் என அஸ்வினி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+