நடக்கிறதை வேடிக்கை பாருங்க.. மங்களூருக்கு பறந்த அண்ணாமலை.. என்ன காரணம்? எதோ நடக்குது?
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றமா? புதிய தலைவர் நியமிக்கப்படுகிறாரா? என்ற கேள்விகள் தான் கடந்த இரண்டு வாரங்களாக தமிழக அரசியலில் கொடி கட்டிப் பறந்து வருகிறது. இதற்கு காரணம், பாஜகவின் அகில இந்திய ஆளுமைகளான அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை அதிமுக வி.வி.ஐ.பி.க்களும், பாஜக தலைவர் ரேசில் இருப்பவர்களும் டெல்லிக்கு சென்று சந்திப்பதும், தமிழக அரசியலை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா, அடிக்கடி சென்னைக்கு வந்து ஆலோசனை நடத்துவதும்தான்.
இப்படிப்பட்ட சூழலில், பாம்பனில் ரயில்வே புதிய பாலத்தை திறந்து வைப்பதற்காக ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடியின் நிகழ்வின் மேடையில் தமிழக சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு இடமளிக்கப்பட்டிருந்தது. அண்ணாமலைக்கு மேடையில் இடமில்லை. பார்வையாளர்கள் இடத்தில்தான் இருக்கைப் போடப்பட்டிருந்தது. மோடியின் மேடையில் இருக்கும்படி நயினாருக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்ததால் அப்போதே, நயினார்தான் அடுத்த தலைவர் என்று பாஜகவினர் பேசத் தொடங்கி விட்டனர்.

விழா முடிந்து டெல்லிக்கு மோடி கிளம்பியதும், நயினாருக்கு ஏகப்பட்ட ஃபோன்கள். பாஜக, அதிமுக தரப்பிலிருந்துதான் அதிகப்படியான ஃபோன்கள். பாஜக, அதிமுக தவிர, திமுகவின் அதிகார மட்டத்திற்கு நெருக்கமான சிலரிடமிருந்தும் நயினாருக்கு ஃபோன் பறந்துள்ளது. ஃபோன் அழைப்பையோ, பேசப்படும் பேச்சுகளையோ ரெக்கார்ட் பண்ண முடியாத ஐ-ஃபோன் ஃபேஸ் டைம் வழியாக நயினாரை தொடர்புகொண்டிருக்கிறது திமுக.
மோடி முக்கிய முடிவு
மோடியின் மேடையில் முக்கியத்துவம் தரப்பட்டதை வைத்தே, அவர் தான் இனி மாநில தலைவராக வரப் போகிறார் என்கிற நம்பிக்கையில் நயினாருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள். வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டிய நயினார், தமக்கு வாழ்த்துச் சொன்ன பாஜக, திமுக தரப்பினரிடம், ''அவசரப்படாதீர்கள் ; இன்னும் இறுதியாக முடிவாகவில்லை. 8-ந்தேதி நிர்மலாவை சந்திக்க டெல்லிக்கு வரச் சொல்லி ஒரு உத்தரவு இருக்கிறது. டெல்லியில் அவரை சந்தித்துவிட்டு சென்னைக்கு வந்ததும் பொசிசன் என்னவென்று சொல்கிறேன். அப்போது வாழ்த்துங்கள் '' என்று அவர்களிடம் சொல்லியிருக்கிறார் நயினார்.
மோடியின் மேடையில் இருந்ததை வைத்து அண்ணாமலையிடம், ''அவர் தான் புதிய தலைவரா? உங்களுக்கான வாய்ப்பு பறிப்போகிறதா?'' என்று அண்ணாமலைக்கு நெருக் கமானவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அண்ணாமலை, '' பிரதமர் மோடி கலந்து கொண்டிருப்பது அரசு விழா. அதில் நான் மேடையேறுவது ப்ரோட்டகால்படி முடியாது. அதனையும் மீறி நடந்தால் அதுவே சர்ச்சையாகும். பிரதமருக்கும் சங்கடம். அதனால் தான் எனக்கு மேடை கிடைக்கவில்லை. நயினாருக்கு மேடையில் இடமளிக்கப்பட்டதாலேயே அவர்தான் அடுத்த தலைவர் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.
எனக்கு கிடைத்த கிப்ட்
எனக்கு கிடைத்த தகவல்படி, சென்னைக்கு அமித் ஷா வந்து விட்டு சென்றப்பிறகுதான் இறுதி முடிவு எடுப்பார்கள். அதுவரை, பொறுமையாக நடப்பதை மட்டும் வேடிக்கை பார்க்கலாம் என இருக்கிறேன். என்னை பதவியில் இருந்து துரத்துவதில் அதிமுக மட்டுமல்ல ; திமுகவும் முயற்சிக்கிறது என்பதுதான் எனக்கு கிடைத்த கிப்ட்!'' என்று சொல்லி வருகிறார் அண்ணாமலை. இந்த நிலையில், டெல்லியில் முக்கிய தலைவர்களை இன்று சந்திக்க நேற்று அவசரமாக கிளம்பிச் சென்றுள்ளார் நயினார் நாகேந்திரன். அதேசமயம், திடீரென்று யாரிடமும் சொல்லாமல் மங்களூர் சென்றுள்ள அண்ணாமலை, மங்களூரில் உள்ள தனது நண்பரின் ஹெஸ்ட் ஹவுஸில் தங்கியுள்ளாராம் என்கிறது அவருக்கு நெருக்கமான தரப்பு.
-
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications