நத்தம் நிலம் வச்சிருக்கீங்களா? பராமரிக்கலன்னா அனாதீனம் ஆகிடும்! நில உரிமையாளர்களுக்கு பகீர் வார்னிங்
சென்னை: நத்தம் மற்றும் ரயத்துவாரி நிலங்களை முறையாக பராமரிக்காமல் நிலவரி செலுத்த தவறுபவர்களின் சொத்துக்கள் "அனாதீனம்" என்ற நிலைக்கு தள்ளப்படும் என டாக்டர் ஆ.ஹென்றி எச்சரிக்கை விடுத்துள்ளார்.. பட்டா கையில் இருந்தாலும் வாரிசுதாரர் பெயர் மாற்றம் மற்றும் ஆவணங்களை புதுப்பிக்காமல் இருப்பது எதிர்காலத்தில் உரிமையாளர்கள் தங்கள் நிலத்தை இழக்கும் அபாயத்தை உருவாக்கும்.. எனவே பொதுமக்கள் ஆண்டுதோறும் நிலவரி செலுத்தி இ-சேவை மூலம் ஆவணங்களை சரிபார்த்து தங்கள் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

அரசின் 'அனாதீனம்' பதிவேடு
இதுகுறித்து ஹென்றி விடுத்துள்ள அறிக்கையில், "ஒரு நிலத்தின் உரிமையாளர் நீண்டகாலமாக நிலவரி செலுத்தாமல் இருப்பது, வாரிசு பெயர் மாற்றம் செய்யாமல் காலம் தாழ்த்துவது, நிலத்தை பராமரிக்காமல் கைவிடுவது, பட்டா மற்றும் வருவாய் ஆவணங்களை புதுப்பிக்காமல் விடுவது போன்ற காரணங்களால், அந்த நிலம் அரசின் 'அனாதீனம்' பதிவேட்டில் சேர்க்கப்படும் அபாயம் உருவாகிறது.
ரயத்துவாரி நிலங்களில் நிலவரி
குறிப்பாக ரயத்துவாரி நிலங்களில் நிலவரி தொடர்ந்து செலுத்தப்படாமல் இருந்தால், அந்த நிலம் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்லக்கூடிய சூழல் ஏற்படும். வருவாய்த் துறை A-Register-ல் 'அனாதீனம்' என பதிவு செய்யப்பட்ட பிறகு, அந்த நிலத்தின் மீது உரிமை நிரூபிப்பது மிகவும் சிக்கலான ஒன்றாக மாறிவிடும்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், உரிமையாளர்கள் இருந்தபோதிலும் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. 'பட்டா கையில் இருக்கிறது; இனி எந்தப் பிரச்சனையும் இல்லை' என்ற தவறான நம்பிக்கையே பலரின் சொத்துக்களை சட்ட சிக்கலுக்கு உள்ளாக்கி வருகிறது.
பட்டா, சிட்டா, அடங்கல்
பட்டா, சிட்டா, அடங்கல், FMB, நிலவரி ரசீது உள்ளிட்ட ஆவணங்களை முறையாக பராமரிக்காதது, நிலத்தை நேரில் பார்வையிடாமல் இருப்பது, எல்லைக் கற்களை சரிபார்க்காமல் அலட்சியம் காட்டுவது போன்றவை பின்னாளில் உரிமை தகராறு, போலி ஆவண மோசடி, வாரிசு பிரச்சனை மற்றும் நீதிமன்ற வழக்குகளுக்கு வழிவகுக்கின்றன.
எனவே பொதுமக்கள் ஆண்டுதோறும் நிலவரி செலுத்தி ரசீதுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் நகல்களை e-Services மூலம் அவ்வப்போது பதிவிறக்கம் செய்து சரிபார்க்க வேண்டும்.
குடும்பத்தில் சொத்து வைத்திருப்பவர் இறந்தால் உடனடியாக வாரிசு பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அதுபோல் FMB படி எல்லைக் கற்கள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து, தேவையானால் Surveyor மூலம் மீண்டும் அளவீடு செய்து கற்கள் நட வேண்டும்.
நிலத்தை பாதுகாப்போம்
நிலம் என்பது வெறும் சொத்து அல்ல; அது ஒரு குடும்பத்தின் பாதுகாப்பும், எதிர்காலத்தின் அடித்தளமும் ஆகும். அதை கவனிக்காமல் விட்டால், அதே நிலம் ஒருநாள் உரிமை இழப்புக்கும் சட்ட சிக்கலுக்கும் காரணமாக மாறக்கூடும்.
'நிலத்தை பாதுகாப்போம்... உரிமையை உறுதிப்படுத்துவோம்... எதிர்காலத்தை காப்போம்...' என்ற விழிப்புணர்வு எண்ணத்துடன் பொதுமக்கள் விழித்திருக்க வேண்டும்," என்று டாக்டர் ஆ.ஹென்றி தெரிவித்துள்ளார்.க்டர் ஆ.ஹென்றி பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications