தாய்ப்பத்திரம் தொலைந்துவிட்டதா? நத்தம் பட்டா இருந்தால் மட்டும் போதுமா? நிலம் வாங்குவோர் இதை கவனியுங்க
சென்னை: சொந்த வீடு அல்லது நிலம் வாங்குவது என்பது ஒரு சராசரி மனிதனின் வாழ்நாள் கனவாகும்.. இந்த கனவு நனவாகும் போது, அதில் எந்தவித சட்ட சிக்கல்களும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.. அந்தவகையில், நிலம் வாங்குவதற்கு முன்னால் கவனிக்க வேண்டிய ஆவணங்கள், அரசு விதிகள் மற்றும் நடைமுறைகள் குறித்து இங்கு சுருக்கமாக பார்பபோம்.
சொத்து வாங்குவோர், ஒரு நிலத்தை சரியாக தேர்வு செய்துள்ளாமா? என்பதில் இருந்தே கவனமாக இருக்க வேண்டும்.. ஒரு நிலத்தை வாங்குவதற்கு முன்பாக, அந்த பகுதியின் அரசு வழிகாட்டி மதிப்பினை பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும். இது நிலத்தின் குறைந்தபட்ச விலையை அறிய உதவும்.

பிறகு நேரடியாகவே சென்று நிலத்தை பார்வையிட்டு, அதன் இப்போதைய சந்தை விலை என்ன என்பதை சுற்றுவட்டாரத்தில் விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும். அந்த நிலம் விவசாய நிலமா, நத்தம் பட்டாவா அல்லது புறம்போக்கு நிலமா என்பதை கிராம நிர்வாக அலுவலரிடம் உறுதிப்படுத்துவது முதல் படியாகும்.
தாய் பத்திரம் மற்றும் அசல் ஆவணங்கள்
அடுத்ததாக, நிலத்தின் தற்போதைய உரிமையாளருக்கு அந்த சொத்து எப்படி வந்தது என்பதை விளக்கும் ஆவணமே தாய் பத்திரம் மிக முக்கியமானதாகும்..
குறைந்தது கடந்த 30 முதல் 50 ஆண்டுகால ஆவணங்களை சரிபார்ப்பது பாதுகாப்பானது. பழைய ஆவணங்களில் உள்ள சர்வே எண்கள், நிலத்தின் அளவு மற்றும் எல்லைகள் தற்போதைய ஆவணங்களுடன் ஒத்துப்போகின்றனவா என்று பார்க்க வேண்டும்.
விற்பனையாளரிடம் அனைத்து அசல் ஆவணங்களும் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்; ஏனெனில் அசல் ஆவணங்கள் வங்கியில் அடமானமாக வைக்கப்பட்டு கடன் வாங்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
வில்லங்கச் சான்றிதழ் - சட்ட ஆலோசனை
அடுத்ததாக, சொத்தின் கடந்த கால பரிமாற்றங்களைத் தெரிந்துகொள்ள வில்லங்க சான்றிதழ் மிக முக்கியம். இதனை பதிவுத்துறையின் வெப்சைட்டில் டவுன்லோடு செய்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமையாளர் பெயர்களும், விற்பனையாளர் தரும் பத்திரத்தில் உள்ள பெயர்களும் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
சொத்தின் மீது ஏதேனும் நீதிமன்ற வழக்குகள் அல்லது நிலுவையில் உள்ள கடன்கள் இருக்கிறதா என்பதெல்லாம் இதில் அப்பட்டமாக காட்டி தந்துவிடும்..
சிக்கலான சட்டப் பிரிவுகள் இருந்தால், ஒரு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரிடம் ஆவணங்களைக் காட்டி சட்டத் தகுதிச்சான்று அதாவது லீகல் ஒப்பீனியன் பெறுவது பிற்கால பிரச்சினைகளைத் தவிர்க்கும்.
நிலத்தை அளவிடுதல்
அடுத்ததாக, ஆவணங்களில் உள்ள அளவும், நேரில் இருக்கும் அளவும் சரியாக இருக்கிறதா என்பதை அரசு அங்கீகாரம் பெற்ற சர்வேயரை மூலம் அளந்து பார்க்க வேண்டும்... அதேபோல நிலத்தின் வழியே உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் செல்கிறதா என்பதை கவனிக்க வேண்டும், இல்லையெனில் வீடு கட்ட அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
மேலும், அந்தப் பகுதியின் நிலத்தடி நீர் மட்டம், நீரின் தரம் மற்றும் மண்ணின் உறுதித்தன்மை போன்றவற்றை ஆராய வேண்டும். குறிப்பாக மழைக்காலங்களில் அந்த இடத்தில் நீர் தேங்குமா என்பதையும், அருகில் ஆறு அல்லது குளங்கள் ஏதும் இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
அரசு அங்கீகாரம் மற்றும் உள்ளாட்சி விதிகள்
நகர் ஊரமைப்பு இயக்ககம் DTCP அல்லது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் CMDA போன்ற அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற லே-அவுட்களை வாங்குவது பாதுகாப்பானது. அங்கீகரிக்கப்பட்ட நிலங்களில் சாலைகள் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கான இடங்கள் முறையாக ஒதுக்கப்பட்டிருக்கும்.
வாரிசுரிமை அடிப்படையில் வரும் சொத்துக்களை வாங்கும் போது, அனைத்து வாரிசுகளின் சம்மதமும், குறிப்பாக பெண் வாரிசுகளின் கையெழுத்தும் ரொம்பவும் அவசியமாகிறது... ஏனென்றால் உயில் மூலம் வரும் சொத்தாக இருந்தால், அந்த உயில் முறையாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
பத்திரப்பதிவு - கிரைய ஒப்பந்தம்
இறுதியாக, நிலத்தை வாங்க முடிவு செய்த பிறகு, ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸ் தந்து, கிரைய ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இதில் இறுதித் தொகை, நிலத்தை ஒப்படைக்கும் காலம் போன்றவற்றை எல்லாம் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
பத்திரப் பதிவு செய்யும்போது, அரசு நிர்ணயித்துள்ள முத்திரைத் தீர்வை மற்றும் பதிவு கட்டணங்களை முறையாக செலுத்தி, சாட்சிகள் முன்னிலையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவை முடிக்க வேண்டும். அதன் பிறகு பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்து, வருவாய்த்துறை ஆவணங்களில் உங்கள் பெயரை ஏற்றிவிட்டால் அந்த நிலம் முழுமையாக உங்களுக்குச் சொந்தமாகிவிடும்.
எனினும், நிலம் தொடர்பான ஆவண சரிபார்ப்பிற்கு ஒரு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரையும், நிலத்தின் வகைப்பாடு மற்றும் எல்லைகளுக்கு கிராம நிர்வாக அலுவலரையும் (அணுகுவது சிறந்தது.. பாதுகாப்பானதும்கூட...!!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications