பிஎஸ்பிபி ஆசிரியர் பாலியல் வழக்கு.. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை!
சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
சென்னை கே.கே நகரில் பத்ம சேஷாத்ரி தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கணக்குபதிவியல் மற்றும் வணிகவியல் துறையை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் மீது முன்னாள் மாணவர்கள் பலர் பாலியல் புகார் அளித்துள்ளனர். ஆசிரியர் ராஜகோபாலன், பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துளளதாக புகார்கள் கூறியுள்ளனர்.

காம கொடூர ஆசிரியர் கைது
ஆன்லைன் வகுப்புகளின்போது மாணவிகளுக்கு ஆபாச படங்களின் இணையதள பக்கங்களை காண்பிப்பதும், ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவதும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் ஆசிரியர் ராஜகோபாலன் மீது அதிர்ச்சி புகார்களை அடுக்கினார்கள். இதனை தொடர்ந்து காம கொடூர ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் கைது செய்தனர்.

ஜெயிலில் அடைப்பு
அவரிடம் இந்த பாலியல் புகார் குறித்து விடிய, விடிய விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து அவரை புழல் ஜெயிலில் அடைத்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவிகளுக்கு பெற்றோர் அந்தஸ்த்தில் இருந்து நல்லவற்றை போதிக்கும் ஆசிரியரே இவ்வாறு செய்யலாமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினார்கள்.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
இந்த நிலையில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த், தமிழக போலீஸ் டி.ஜி.பி திரிபாதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

வேதனை அளிக்கிறது
சென்னை பத்ம சேஷாத்ரி தனியார் பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து பத்திகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தப்படுகிறது. கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் முக்கியத்துவமாகியுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் நடக்கும் இதுபோன்ற சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.

டி.ஜி.பி திரிபாதிக்கு உத்தரவு
ஆன்லைன் வகுப்புகளை பள்ளி நிர்வாகம் முழுமையாக கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் ஆன்லைன் வகுப்புகளை மாணவிகளுக்கு பாதுகாப்பு முன்னுரிமையில் முறைப்படுத்த வேண்டும். இந்த சம்பவம் குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி திரிபாதி முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை அறிக்கையை முழு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications