சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியலாக்காதீங்க.. தேசிய கல்விக் கொள்கை விரைவில் நடைமுறைக்கு வரும்.. ஆளுனர் ஆர்என் ரவி பரபர பேச்சு!

Google Oneindia Tamil News

சென்னை: விரைவில் புதிய தேசிய கல்விக் கொள்கை சுமூகமாக நடைமுறைக்கு வரும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பேசி உள்ளார்.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய கல்விக்கொள்கை குறித்த 2 நாள் கருத்தரங்கு இன்று தொடங்கியது. ஆளுநர் ரவி இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து இன்று பேசினார். கருத்தரங்கில் தேசிய கல்விக்கொள்கை குறித்த சிறப்பம்சங்களை ஆளுனர் ஆர். என் ரவி எடுத்துரைத்தார்.

அதில், புதிய தேசிய கல்விக்கொள்கை வந்தால் நாடு வேகமாக வளர்ச்சி பாதைக்கு செல்லும். புதிய கல்விக்கொள்கையை எல்லோரும் படிக்க வேண்டும்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்ரவி மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? போராட்டம் நடத்தியவர்கள் என்ன சொல்கிறார்கள்?தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்ரவி மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? போராட்டம் நடத்தியவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஆர் என் ரவி பேச்சு

ஆர் என் ரவி பேச்சு

எல்லோரும் இதை படித்து, முக்கியமாக ஆட்சியாளர்கள் இதை படித்து உணர வேண்டும். அதன்பின் அதன் மீதான விமர்சனங்களை வைக்க வேண்டும். விரைவில் புதிய தேசிய கல்விக் கொள்கை சுமூகமாக நடைமுறைக்கு வரும். கல்வி கொள்கைகளை அரசியல் ரீதியாக பார்க்க கூடாது . நம்முடைய கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் ஆகியவை பல்வேறு அரசாங்கங்களால் ஏற்கனவே மறைக்கப்பட்டது.

சிறப்பு என்ன?

சிறப்பு என்ன?

இந்த மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டு எடுக்கும் வகையில் புதிய தேசிய கல்விக்கொள்கை அமையும். தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக இரண்டு நாள் கருத்தரங்கு நடக்க உள்ளது. இந்த கருத்தரங்கில் கல்விக்கொள்கையின் சிறப்பம்சத்தை மக்களிடம் கொண்டு ஆட்சியாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

கல்விக்கொள்கை

கல்விக்கொள்கை

அப்படிப்பட்ட புதிய கல்விக்கொள்கையை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. ஆனால் இப்போது ஒற்றுமைக்கு பதிலாக வேற்றுமையில் வேற்றுமையை பார்க்கும் போக்கு அதிகரித்து உக்ள்ளது. எந்த ஒரு திட்டத்தையும் சாராம்சம் புரியாமல் எதிர்க்க கூடாது.

அரசியல்

அரசியல்

இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் கொண்டு வரும் திட்டங்களின் சாராம்சத்தை புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது மக்களுக்கு நலன் பயக்கும். 74 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் பெரிய மாற்றம் இல்லை. இது ஆங்கிலேயர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட கொள்கை.. இதில் சீர்திருத்தத்தை செய்ய வேண்டும்.

English summary
National education policy will be implement smoothly swiftly says Governor R N Ravi . விரைவில் புதிய தேசிய கல்விக் கொள்கை சுமூகமாக நடைமுறைக்கு வரும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பேசி உள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X