தேசிய விவசாயிகள் தினம் : விவசாயிகளுக்கு குவியும் வாழ்த்து - முதல்வர், துணைமுதல்வர் ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகின் அனைத்து மனித உயிர்களுக்கும் உணவளிக்கும் கடவுள்களின் தினமான தேசிய விவசாயிகள் தினத்தில், தேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமான நம் விவசாய பெருமக்களை இன்றுபோல் என்றும் அரவணைப்போம் என தாய்த்தமிழ் உறவுகள் உறுதியேற்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளே கடந்த 16 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சியின் அரசியல் தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்களும் தங்களின் வாழ்த்துக்களை பதிவிட்டு #NationalFarmersDay என்ற ஹேஸ்டேக்கினை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

உணவளிக்கும் கடவுள்கள்

உலகின் அனைத்து மனித உயிர்களுக்கும் உணவளிக்கும் கடவுள்களின் தினமான தேசிய விவசாயிகள் தினத்தில், தேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமான நம் விவசாய பெருமக்களை இன்றுபோல் என்றும் அரவணைப்போம் என தாய்த்தமிழ் உறவுகள் உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு அரசு உறுதுணை

"உழுவார் உலகத்தார்க்கு ஆணி"அனைத்து விவசாய பெருமக்களுக்கும் எனது உளமார்ந்த தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகள்! விவசாயிகளின் நலன் பேணவும், அவர்களின் உயர்விற்கு வழிகாணவும், வாழ்க்கைத் தரம் உயரவும் மாண்புமிகு அம்மாவின் அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும். #NationalFarmersDay என்று பதிவிட்டுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுக

இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி, உழவர் சந்தைகள், குறைந்தபட்ச ஆதார விலை என சாதித்த திமுக என்றுமே விவசாயிகளின் உற்ற துணையாக நிற்கும். விவசாயிகள் அனைவருக்கும் #NationalFarmersDay வாழ்த்துகள்!மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக இன்று @PMOIndia வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளுக்கு நன்றி

விவசாயிகளுக்கு நன்றி

ஆண்டுதோறும் டிசம்பர் 23ஆம் தேதியை தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்நாளில் விவசாயிகளின் கடின உழைப்பை போற்றுவோம். நன்றி கூறுவோம். ‘விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும்'. ஆகவே, அவர்கள் உயர்வுக்கு நாம் அனைவரும் துணை நிற்கவேண்டும். கொரோனா காலத்தில் உலகமே முடங்கி இருந்தபோது, விவசாயிகள் மட்டும்தான் தங்கள் விவசாயப் பணியை தொடர்ந்து செய்து அனைவரது பசியை போக்கினர் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். இந்நாளில் விவசாயிகள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+