கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் 2-ம் பாகம், கலைஞர் டிவியில் ஏப்ரல் 17ம் தேதி முதல் ஒளிபரப்பு
சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதி தயாரிக்கும் நாட்படு தேறல் தனிப்பாட்டு நிகழ்ச்சியின் 2 ஆம் பாகம் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் வாரம்தோறும் ஒளிபரப்பாக உள்ளது.
Recommended Video
நாட்படு தேறல் என்ற தனிப்பாட்டு நிகழ்ச்சியைக் கவிஞர் வைரமுத்து தயாரித்து வழங்கி வருகிறார்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாட்படு தேறலின் முதல் பருவம் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து நாட்படு தேறல் இரண்டாம் பருவம் தயாராகியிருக்கிறது.

ஏப்ரல் 17 ஆம் தேதி முதல்...
100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 இயக்குநர்கள் என்ற பெரும் திட்டத்தோடு இயங்கிவரும் நாட்படு தேறல் 13 பாடல்களோடு 13 வாரங்கள் ஒளிபரப்பாக உள்ளது. ஏப்ரல் 17 ஆம் தேதி முதல், கலைஞர் தொலைக்காட்சி, இசையருவி தொலைக்காட்சி மற்றும் வைரமுத்து யூடியூபில் ஞாயிற்றுக்கிழமை தோறும் 13 வாரங்கள் வெளிவர இருக்கிறது.

ஆல்பங்களில் கவனம் செலுத்தும் வைரமுத்து
மேலை நாடுகளில் திரைப்படங்களைவிட்டுப் பாடல்கள் பெரும்பாலும் வெளியேறிவிட்டன. மேல்நாடுகளில் வெளியாகும் தனிப்பாட்டு ஆல்பங்களே உலகளவில் புகழ்பெற்று விளங்குகின்றன. இந்தியாவில் அந்த முயற்சி கொஞ்சம் கொஞ்சமாக மலரத் தொடங்கி உள்ளது. கவிஞர் வைரமுத்துவும் தமிழில் அதற்கான முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் யார் யார்?
ஒரு பாடகர் ஓர் இயக்குநர் என்று தேர்தெடுத்துப் பாடல் படமாக்கப்பட்டு ஒளிபரப்பாக்கப்படுகிறது. நாட்படு தேறல் இரண்டாம் பருவத்தில், வித்யாசாகர், யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ரமேஷ் விநாயகம், அனில் சீனிவாசன், ஜெரார்ட் பெலிக்ஸ், நெளபல் ராஜா, அவ்கத், வாகு மசான், இனியவன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களும் இசையமைக்கின்றனர்.

பாடகர்கள், இயக்குநர்கள் யார்?
எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, விஜய் யேசுதாஸ், ஹரிணி, கல்பனா, ராகவேந்தர், பென்னி தயாள், ஹரிசரண், அந்தோணி தாசன், வைக்கம் விஜயலட்சுமி உள்ளிட்ட பாடகர்களும், காந்தி கிருஷ்ணா, சரண், பரதன், சிம்புதேவன், சரவண சுப்பையா, காக்கா முட்டை மணிகண்டன், விருமாண்டி, கணேஷ் விநாயம், விக்ரம் சுகுமாரன், தளபதி பிரபு, ரமேஷ் தமிழ்மணி, ராதிகா உள்ளிட்ட இயக்குநர்களும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.

திரைப்பாட்டில் தமிழ் கற்றுக்கொண்டேன்
நாட்படு தேறல் குறித்து கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து "எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்ததில் திரைப்பாட்டுக்குப் பெரும்பங்கிருக்கிறது. இன்று உலகமெங்கும் திரைப்படத்தில் தாய்மொழி குறைந்துவிட்ட சூழ்நிலையில், தமிழ் கற்றுக்கொடுக்கும் பாடல்களாக ஆல்பங்கள் தயாரிக்கப்பட வேண்டியிருக்கின்றன.
|
தமிழர்களுக்குக் காணிக்கை
ஒரு தலைமுறைக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கும் கடமையை நாட்படு தேறல் ஆற்றும்; ஆற்றவேண்டும் என்று விரும்புகிறேன். என்னோடு ஒத்துழைக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. தகுதிமிக்க ஆதரவாளர்களால்தான் இது சாத்தியமாகிறது; அவர்களை நான் மறக்க மாட்டேன். நாட்படு தேறல் என் சமகாலத்தில் வாழும் உலகத் தமிழர்களுக்குக் காணிக்கை" என்றார்.












Click it and Unblock the Notifications