தனுஷுக்கு எதிராக கொந்தளித்த நயன்தாரா.. முதல் ஆளாக வந்து சப்போர்ட் செய்த பார்வதி! இது தான் காரணமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது திருமணம் குறித்த ஆவணப் படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை என நடிகரும் 'நானும் ரவுடி தான்' படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் மீது குற்றம் சாட்டி மிக நீண்ட காட்டமான கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார் நடிகை நயன்தாரா. அதற்கு நடிகை பார்வதி ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சந்திரமுகி, கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, உள்ளிட்ட படங்களில் ஹீரோயின் ஆகி இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை நயன்தாரா. தமிழில் விஜய், அஜித், ரஜினி, சரத்குமார், சிம்பு, அஜித், ஜெயம் ரவி என சீனியர் ஜூனியர் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பிரபலமானார்.

nayanthara dhanush

பல காதல் சர்ச்சைகளில் சிக்கிய போதும் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபல நடிகரான தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களது திருமணம் தொடர்பான ஆவணப்படம் "Nayanthara: Beyond the Fairy Tale" என்ற பெயரில் நாளை மறுநாள் நெட் ப்ளிக்சில் வெளியாகியுள்ளது.

திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆவண படம் வெளியாகாமல் இருந்து நிலையில் தனுஷ் தான் இந்த விவகாரங்களுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. நானும் ரவுடி தான் படத்தில் பணியாற்றிய போது தான் நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனால் தங்கள் திருமணம் தொடர்பான ஆவணப் படத்தில் நானும் ரவுடி தான் படத்தில் இருந்து சில வரிகளையும் காட்சிகளையும் பயன்படுத்த தனுஷிடம் நயன்தாரா அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தொடர்ந்து தனுஷ் அதற்கு அனுமதி தராமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்து வந்ததாகவும் இறுதியாக அதனை பயன்படுத்தக் கூடாது என கூறியதாகவும் கூறப்படுகிறது. தன் மீதான தனிப்பட்ட வெறுப்பால் நானும் ரவுடிதான் படத்தின் பாடல் வரிகளை பயன்படுத்த தனுஷ் தடை போட்டதாக குற்றம் சாட்டிய நயன்தாரா, ஸ்ப்ரெட் லவ் என்பதை வெறும் வார்த்தையாக மட்டுமின்றி வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

தொடர்ந்து தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் வைத்திருந்தார். குறிப்பாக ஆவணப்படம் தொடர்பான டிரைலரின் மூன்று நொடி காட்சிகளை பயன்படுத்த 10 கோடி ரூபாய் தனுஷ் கேட்டதாகவும் அவர் கூறியது தமிழ் திரையுலகில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. இந்த நிலையில் தனுஷ் மீதான நயன்தாராவின் பரபரப்பு குற்றச்சாட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை பார்வதி அதனை பகிர்ந்து இருந்தார். அது மட்டும் அல்லாமல் நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், நஸ்ரியா பகத் பாசில், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரும் அவரது பதிவை லைக் செய்து இருந்தனர்.

இவர்கள் அனைவரும் தனுஷுடன் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தது ஏன் என்பது குறித்து பார்வதி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்," சுற்றி நிறைய பேர் இருந்தும் அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்தவள். ஒருவருக்கு ஆதரவு அளிக்க எனக்கு நீண்ட நேரம் தேவைப்படவில்லை. நயன்தாராவின் கடிதத்தை பார்த்தவுடன் அதனை ஷேர் செய்ய வேண்டும் என எனக்கு தோன்றியது. அதனால் அதனை பகிர்ந்தேன்.

நயன்தாரா தன்னுடைய கேரியரை தானே உருவாக்கியவர். லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அவர் ஒரு பகிரங்கமான கடிதத்தை காரணமே இல்லாமல் எழுத மாட்டார். எனக்கு அவரைப் பற்றி நன்றாக தெரியும். தான் எதிர்கொண்டதை மூன்று பக்க கடிதமாக அவர் எழுதியிருந்தார். அதனால் தான் நான் அவருக்கு ஆதரவளித்தேன். நானும் இப்படி ஒரு அனுபவத்தை கடந்து வந்திருக்கிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+