அவ்வளவு பிரச்சனை ஆச்சே.. சர்ச்சையோடு வந்த நயன்தாரா ஆவணப்படத்திற்கு.. இப்படி ஒரு நிலையா?
சென்னை: நயன்தாராவின் திருமண ஆவணப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. நெட்டிசன்கள் பெரிதாக இந்த ஆவணப்படத்தை ரிவ்யூ செய்து போஸ்ட் வெளியிடவில்லை. அதேபோல் இணையத்திலும் பெரிய அளவில் இந்த ஆவணப்படம் விவாதத்தை ஏற்படுத்தாமல் வரவேற்பை இழந்துள்ளது.
பெரிய சர்ச்சைகளுக்கு பின்பே இந்த ஆவணப்படம் வெளியானது. இந்த திருமண ஆவணப் படத்தில் காட்சிகளைப் பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் தந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை கூட வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.

உங்களை அணுகியபோது எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்று வழங்கியதை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். ஆவணப்படத்தில் காட்சிகளை பயன்படுத்த அனுமதி வழங்கிய தயாரிப்பாளர்கள் ஷாருக்கான் உட்பட பலருக்கும் நன்றி தெரிவித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
ஆனால் இந்த ஆவணப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. நெட்டிசன்கள் இடையே பெரிதாக இந்த ஆவணப்படம் எந்த விதமான விவாதங்களையும் ஏற்படுத்தவில்லை.
நடிகை நயன்தாராவின் "nayanthara the fairy tale" நெட்பிளிக்ஸ் ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் 24 நொடி பிடிஎஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. படத்தின் 3 நொடி காட்சியை தனுஷ் பயன்படுத்த அனுமதிக்காத நிலையில் 24 நொடி பிடிஎஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகள் படத்தில் வேலை பார்த்தவர்கள் தங்கள் போனில் எடுத்த காட்சிகள் ஆகும். அதாவது படத்தின் தயாரிப்பு செலவில் எடுத்த காட்சிகள் கிடையாது.
பெரும்பாலும் இவை நயன்தாரா - விக்னேஷ் போனில் எடுத்த காட்சிகள்தான். அதன் காரணமாக அது அவர்களின் சொந்த காட்சிகள் என்பதால் ஆவணப்படத்தில் பயன்படுத்தி உள்ளனர். ஆனால் தனுஷ் இதையும் எதிர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தனுஷ் ஏற்கனவே நோட்டீசும் அனுப்பி இருந்தார். 10 கோடி ரூபாய்க்கு நடிகை நயன்தாராவிற்கு நடிகர் தனுஷின் லீகல் டீம் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில், நானும் ரவுடிதான் படம் தனுஷ் தயாரித்தது. ஒப்பந்தத்தின்படி.. படத்தின் எல்லா காட்சிகளும் தனுஷுக்கு சொந்தமானது. படத்தின் தயாரிப்பு காட்சிகள்.. அதாவது பிடிஎஸ் காட்சிகள் தனுஷுக்கு சொந்தமானது.
இந்த பிடிஎஸ் காட்சிகளை தனுஷ் பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை. அதை மீறி.. நயன்தாரா தனது நெட்பிளிக்ஸ் ஆவணப்படத்தில் அதை பயன்படுத்தி உள்ளார். இந்த காட்சிகளை அவர் நீக்க 24 மணி நேரம் டைம் தரப்படும்.. அவர் நீக்கவில்லை என்றால் 10 கோடி ரூபாய்க்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்கப்படும் என்று தனுஷ் லீகல் டீம் கூறி உள்ளது. இதையடுத்தே.. டிரைலரில் வந்த பிடிஎஸ் காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளன. இதை தொடர்ந்தே தனுஷுக்கு எதிராக நயன்தாரா அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
நயன்தாரா கடிதம்: முன்னதாக நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில், பல தவறான விஷயங்களைச் சரிசெய்வதற்காக இந்த திறந்த கடிதத்தை நான் எழுதி உள்ளேன். உங்கள் தந்தை மற்றும் சிறந்த இயக்குனரான உங்கள் சகோதரரின் ஆதரவுடனும், ஆசியுடனும் ஒரு பிரபல நடிகராக நீங்கள் வலம் வருகிறீர்கள். உங்களை போல அல்லாமல் சினிமா என்பது என்னைப் போன்றவர்களுக்கு வாழ்வதற்கான போராட்டம். சினிமாதொழில்துறையில் எந்த தொடர்பும் இல்லாத சுயமாக வந்த பெண் நான். நான் இன்று வகிக்கும் இந்த பதவிக்கு நான் போராட வேண்டியிருந்தது. அது சாதாரணமாக வரவில்லை.
நான் வெளியிடப்போகும் நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தின் ரிலீஸ் எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மட்டுமல்லாது பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் அனுபவித்த அனைத்து சிரமங்களையும் கடந்து இந்த ஆவணப்படத்தை வெளியிட உள்ளோம். மிகப்பெரிய குழு இதற்காக பணிகளை செய்துள்ளது. இது என்னை பற்றிய, என் வாழ்க்கையை பற்றிய , என் திருமணத்தை பற்றிய, நான் சினிமாவில் வேலை பார்த்தவர்கள் பற்றிய ஆவணப்படம்.
ஆனால் என் வாழ்வில் முக்கியமான படமான.. நானும் ரவுடிதான் படத்தின் கிளிப் ஒன்றையும், பாடலையும் வைக்க முடியாமல் நான் போராடிக்கொண்டு இருக்கிறேன். இதற்காக கடந்த 2 வருடமாக உங்களிடம் என்ஓசி வாங்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். இதனால் அந்த படத்தில் உள்ள பாடல் ஒன்றை கூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளேன். அந்த படத்தில் வேலை பார்த்த சில புகைப்படங்களை கூட பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.ஆனால் இந்த காட்சிகள், பாடல்கள், புகைப்படங்களை நீங்கள் எங்களுக்கு கொடுக்காமல் போனது என் இதயத்தை நொறுக்குகிறது.
நீங்கள் பிஸ்னஸ் தேவைகள் மற்றும் பண தேவைகள் காரணமாக இப்படி செய்துள்ளீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் எங்கள் உங்களுக்கு வன்மம் காரணமாகவே நீங்கள் இப்படி செய்துள்ளீர்கள் என்பது தெரியும். உங்களின் இந்த வன்மம் மனதை வதைக்கிறது.நான் பர்சனலாக எடுத்த.. எங்கள் போனில் எடுத்த சில புகைப்படங்கள் வீடியோக்களை கூட பயன்படுத்த அனுமதிக்காமல் நீங்கள் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்காக நீங்கள் 10 கோடி ரூபாய் கொடுத்ததும் கூட எங்கள் மனதை உருக்கி உள்ளது. உங்களின் மோசமான குணத்தை காட்டுகிறது. நீங்கள் எவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டீர்கள் என்பதை இது காட்டுகிறது. எங்கள் மீது உங்களுக்கு உள்ள கோபம்தான் இதற்கு காரணம். 3 நொடி வீடியோவிற்கு 10 கோடி ரூபாய் கேட்பதில் என்ன நியாயம். எங்கள் உங்களுக்கு வன்மம் காரணமாகவே நீங்கள் இப்படி செய்துள்ளீர்கள் என்பது தெரியும். உங்களின் இந்த வன்மம் மனதை வதைக்கிறது.
நீங்கள் உங்களுடைய அடுத்த ஆடியோ லாஞ்சில் கதைகளை சொல்லி கட்டுக்கதையாக பேசுவீர்கள் என்று தெரியும். சினிமாவிற்கு வெளியே தனிப்பட்ட வகையில் இவ்வளவு வன்மத்தோடு நீங்கள் செயல்படும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது, என்று நயன்தாரா குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications