Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறையை விட பாஜகவுககு 7 தொகுதிகளை எடப்பாடி பழனிச்சாமி விட்டு கொடுத்து இருந்தாலும் கூட இன்னொரு வகையில் 'செக்' வைத்துள்ளார். இதில் 9 தொகுதிகள் மட்டுமே பாஜகவுக்கு கட்டமைப்புடன் பலம் உள்ளதாகவும், 18 தொகுதிகளில் திமுகவிடம் பாஜகவை கோர்த்து விட்டுள்ளார். இந்த தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம் என்று கூறப்படும் நிலையில் பாஜகவுக்கு, அதிமுக வழங்கிய 27 தொகுதிகளின் பின்னணி மற்றும் களநிலவரம் பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மைலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் (தெற்கு), கோவை வடக்கு, கந்தர்வ கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகர்கோவில், விளவன்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) என்று பாஜகவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

annamalai bjp tamil nadu assembly election

கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுக்கு 20 தொகுதிகளை வழங்கியிருந்தார். இதில் 4 தொகுதிகளில் பாஜக வென்றது. ஆனால் இப்போது கூடுதலாக 7 தொகுதிகளை பாஜகவுக்கு, எடப்பாடி பழனிச்சாமி விட்டு கொடுத்துள்ளார். இது பாஜக தனது செல்வாக்கை தமிழகத்தில் விரிவுப்படுத்த வாய்ப்பாக அமையும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது பாஜகவுக்கு இன்னொரு வழியில் எடப்பாடி பழனிச்சாமி 'செக்' வைத்துள்ளார்.

வென்ற 2 தொகுதிகளுக்கு 'நோ' என்ட்ரி

7 தொகுதிகளை கூடுதலாக ஒதுக்கியிருந்தாலும் கூட வழங்கப்பட்டுள்ள தொகுதிகளில் 'தாமரை' கட்சி பெற கடினம் என்கின்றர் அரசியல் நோக்கர்கள். அதிமுக சார்பில் பாஜகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கிய தொகுதிகளை உற்று கவனித்தால் நன்றாக புரியும்.
அதாவது 2021 சட்டசபை தேர்தலில் பாஜக திருநெல்வேலி, மொடக்குறிச்சி, கோவை தெற்கு, நாகர்கோவில் ஆகிய தொகுதிகளில் வென்றது. தற்போது அதில் 2 தொகுதிகள் மட்டுமே பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கோவை தெற்கு தொகுதிகளை அதிமுக எடுத்து கொண்டுள்ள நிலையில் மொடக்குறிச்சி, நாகர்கோவில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் திருநெல்வேலி எம்எல்ஏவாக பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளார். அவருக்கே அந்த தொகுதி வழங்கப்படவில்லை. இதனால் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரன் சார்ந்த தேவர் சமுதாய மக்கள் அதிகம் வசிப்பதால் அவரது தேர்வு சாத்தூர் தொகுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கு ஓரளவு வெற்றி வாய்ப்பு உள்ளது.

கொங்கு மண்டல நிலவரம்

அதேபோல் கொங்கு மண்டலத்திலும் பாஜகவுக்கு எதிர்பாராத பின்னடைவை எடப்பாடி பழனிச்சாமி ஏற்படுத்தி உள்ளார். கொங்கு மண்டலத்தில் அதிமுக பலமாக உள்ளது. அதேபோல் பாஜகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் அங்கு கூடுதல் தொகுதிகளை பாஜக எதிர்பார்த்தது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் குறைந்தப்டசம் 3 தொகுதிகளை கேட்டுள்ளது. ஆனால் எடப்பாடி சம்மதிக்கவில்லை. கோவை வடக்கு தொகுதியை மட்டுமே ஒதுக்கி உள்ளார்.

அதேபோல் மொத்த கொங்கு மண்டலத்தையும் எடுத்து கொண்டால் கோவை வடக்கு, உதகமண்டலம், மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு, அவினாசி, ராசிபுரம் 6 தொகுதிகள் மட்டுமே பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் இந்த முறை கோவை வடக்கில் களமிறங்க வாய்ப்புள்ளது. 2021ல் மொடக்குறிச்சியில் வென்ற பாஜக எம்எல்ஏ சி சரஸ்வரதி மீண்டும் அங்கே களம் காண வாய்ப்புள்ளது. அதேபோல் அவினாசியில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலை அப்செட்டில் உள்ள நிலையில் திருப்பூர் தெற்கில் வாய்ப்பு வழங்கலாம் என்று சொல்லப்படுகிறது.

நாகர்கோவில் - மயிலாப்பூர் நிலவரம்

அதேபோல் கடந்த முறை வென்ற நாகர்கோவில் தொகுதியை பாஜக தக்கவைத்துள்ளது. 2021ல் பாஜகவின் எம்ஆர் காந்தி இந்த தொகுதியில் வென்றார். மீண்டும் அவர் இந்த தொகுதியில் போட்டியிடலாம். இல்லாவிட்டால் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், இல்லாவிட்டால் பொன் ராதாகிருஷ்ணனின் ஆதரவாளராக இருக்கும் மீனாதேவ் என்பவர் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் சென்னையை எடுத்து கொண்டால் பாஜக வேளச்சேரி, துறைமுகம், மயிலாப்பூர் உள்ளிட்ட தொகுதிகளை கேட்டது. இதில் மயிலாப்பூர் தொகுதி மட்டுமே பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கு தமிழிசை சவுந்தராஜன் போட்டியிட வாய்ப்புள்ளது. பிராமணர்கள் அதிகம் இருப்பது பாஜகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.இது பாஜகவுக்கு பிளஸ் பாயிண்டடாக அமையலாம்.

18 தொகுதிகளில் வெற்றி சந்தேகம்

இதனால் மயிலாப்பூர், சாத்தூர், நாகர்கோவில், கோவை வடக்கு, உதகமண்டலம், மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு, அவினாசி, ராசிபுரம் உள்ளிட்ட 9 தொகுதிகளில் பாஜக சரியான வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டால் அதிமுக உதவியுடன் வெற்றி பெறலாம். மாறாக மீதமுள்ள 18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம் என்று கூறப்படுகிறது. இந்த 18 தொகுதிகளின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

6 அமைச்சர்களின் கோட்டையில் பாஜக

அதன்படி பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ள தஞ்சாவூர், திருவாரூர், திருச்செந்தூர், திருப்பத்தூர் தெற்கு, திருவண்ணாமலை, ஆவடி, ராசிபுரம் உள்ளிட்ட தொகுதிகளை எடுத்து கொண்டால் அது பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கும். இந்த தொகுதிகள் எல்லாம் திமுகவின் கோட்டையாக உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 6 அமைச்சர்களுக்கு எதிராக பாஜக களமிறங்குகிறது.

அதன்படி திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராகிருஷ்ணன், திருவண்ணாமலையில் அமைச்சர் எவ வேலு, ஆவடியில் அமைச்சர் ஆவடி நாசர், திருப்பத்தூர் தெற்கு தொகுதியில் பெரியகருப்பன், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபுரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், திருப்பூர் மாவட்டம் ராசிபுரத்தில் அமைச்சர் மதிவேந்தர் ஆகியோர் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளனர். இந்த தொகுதிகளில் பாஜகவால் வெல்வது கடினம் என்று கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட தொகுதிகள்

அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் கன்னியாகுமரியை அதிமுக தக்க வைத்துள்ளது மாறாக குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, நாகர்கோவில் தொகுதிகள் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக டெபாசிட் இழந்ததால் எடப்பாடி பழனிச்சாமி 4 தொகுதிகளை பாஜகவுக்கு தள்ளிவிட்டுள்ளார். இதில் நாகர்கோவிலில் மட்டுமே பாஜகவுக்கு சாதகமாக சூழல் உள்ளது.

விளவங்கோட்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி களமிறங்க வாய்ப்புள்ளது. இருப்பினும் வெற்றி சந்தேகம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள் ஏனென்றால் இங்கு கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ளனர். அதேபோல் தான் குளச்சல், பத்மநாபபுரம் தொகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் வெற்றியை நிர்ணயம் செய்யும் அளவுக்கு உள்ளனர். இவர்களின் ஓட்டுகள் பாஜகவுக்கு கிடைப்பது சந்தேகம். இது குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு தொகுதிகளில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை குறைப்பதாக சொல்லப்படுகிறது.

தளி - புதுக்கோட்டை தொகுதிகள்

அதேபோல் தளி தொகுதியில் பாஜக 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. அதன்பிறகு 2006, 2011, 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் வென்றதே கிடையாது. திமுக, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் வெற்றியை பதிவு செய்துள்ளன. இது பாஜகவுக்கு தலைவலியாக இருக்கும். அதேபோல் ரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த ஆண்டு 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' யாத்திரையில் புதுக்கோட்டையில் பங்கேற்றனர்.

இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில்பாஜகவுக்கு புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி என மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் பாஜகவுக்கு ஓரளவு ஆதரவு இருந்தாலும் கூட வெற்றி பெறும் அளவுக்கு இல்லை. அதோடு இந்த தொகுதிகளில் பாஜக வலுவான வேட்பாளர்களை தேடி பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் இந்த 3 தொகுதிகளிலும் அதிமுகவின் தயவை எதிர்பார்க்கும் நிலையில் தான் பாஜக உள்ளது.

மதுரை தெற்கு - ராமநாதபுரம்

அதேபோல் மானாமதுரை, மதுரை தெற்கு, ராமநாதபுரம், ராதாபுரம், வாசுதேவநல்லூர், போன்ற தொகுதிகளிலும் பாஜகவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. பலமான வேட்பாளர்களும் அமையலாம். ஆனால், இந்த தொகுதிகளில் அதிமுகவின் தலைவர்களையும், அதிமுக தொண்டர்களையும் பாஜக ஒருங்கிணைத்து செல்வது கடினமாக அமையலாம். இதனால் இந்த தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு என்பது எந்த அளவு களத்தில் பாஜக - அதிமுகவினர் சேர்ந்து செயல்படுகின்றனரோ அதனை பொறுத்தே வெற்றி அமையும் என்பது தான் களஎதார்ததம்.

எடப்பாடியின் பிளான் என்ன?

இதன்மூலம் சென்னை, கோவை உள்பட கொங்கு மண்டலத்தை கோட்டையாக்க நினைக்கும் பாஜகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி செக் வைத்துள்ளது. அதோடு அதிமுகவிற்கு செல்வாக்கு உள்ள கொங்கு மண்டலத்தை பாஜகவிடம் விட்டு கொடுக்க அவர் விரும்பவில்லை. அதேபோல் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் திமுகவின் ஆதிக்கம் உள்ளது.

அங்கு அதிமுக கடினமாக களப்பணியாற்றினால் தான் வெற்றி பெற முடியும். இப்படியான சூழலில் அத்தகயை தொகுதிகளை எடப்பாடி பழனிச்சாமி பாஜக உள்பட பிற கூட்டணி கட்சிகளுக்கு வழங்கி உள்ளதோடு, அதிமுகவிற்கு பலமாக இருக்கும் தொகுதிகளில் தனது ஆதரவாளர்களை களமிறக்கி உள்ளார். இது எடப்பாடி பழனிச்சாமி சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஸ்மார்ட்டான மூவ் செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+