பாஜகவுக்கு 30 தொகுதிகள்.. நயினார் நாகேந்திரனிடம் கூறிய எடப்பாடி பழனிசாமி? டெல்லி பயணத்தின் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 30 தொகுதிகள் வரை ஒதுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை நயினார் நாகேந்திரன் டெல்லியில் ஜேபி நட்டாவை சந்தித்து வழங்க உள்ளதாக தெரிய வருகிறது.

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், பாஜக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. தற்போது டெல்லி சென்றுள்ள நயினார் நாகேந்திரன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். அப்போது பாஜக தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், கருப்பு முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தார். நயினார் நாகேந்திரனின் இந்த பயணத்திற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை சென்னையில் அவரது வீட்டில் சந்தித்தார்.

NDA Alliance

சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மந்தம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது.

இதையடுத்து டெல்லிக்கு 2 நாள் பயணமாக நயினார் நாகேந்திரன் சென்றிருக்கிறார். இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜகவினர் போட்டியிட விரும்பும் தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டாவிடம் அளிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதன்படி அந்த பட்டியலில் மொத்தமாக 55 தொகுதிகள் அடங்கிய விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

அதேபோல் அதிமுக தரப்பில் 30+ தொகுதிகள் வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக, 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஆனால் இம்முறை 30க்கும் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வேளச்சேரி, துறைமுகம் உள்ளிட்ட தொகுதிகளை பாஜக கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கு பாஜக ஏற்கனவே பணிகளை தொடங்கி இருக்கிறது. எஸ்ஜி சூர்யா, வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அமித்ஷா வருகையின் போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சும் முடிவுக்கு வரும் என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+