கூட்டணி இல்லை என்ற அன்புமணி.. தே.ஜா கூட்டணி ஆலோசனைக்கூட்டத்திற்கு அழைப்பு.. ஜி.கே.வாசனும் வரார்
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமாகவின் ஜி.கே.வாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்திற்கு செல்ல உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
ஆளும் பாஜகவிற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் வலிமையான கூட்டணியை உருவாக்கி ஆலோசனை நடத்தி வருகின்றன. 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இதற்காக தேசிய ஜனநாயகக் கட்சியில் உள்ள அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்த உள்ளது.

தலைநகர் டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் வருகிற 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அரசியல் கட்சிகள் பங்கேற்று மக்களவை பொதுத் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு பாஜக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
கூட்டணி பற்றி இப்போது கூற முடியாது என்று அதிமுக கூறிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவிற்கு அழைப்பு விடுத்துள்ளது பாஜக. அதே போல கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாமக சார்பில் சென்னையில் நடைபெற்ற 'மனம் விட்டுப் பேச வாருங்கள்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், லோக்சபா தேர்தலில் பாஜக உடன் பாமக கூட்டணி என்ற வதந்தியை நம்பிவிட வேண்டாம். பாஜக உடன் கூட்டணி தொடர்பாக பேசவில்லை. தேர்தலுக்கு ஐந்து மாதத்துக்கு முன்பாக தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று கூறினார். தமிழகத்தில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையிலான கூட்டணி கட்சியே உறுதியாக ஆட்சியை பிடிக்கும் என்று அன்புமணி கூறினார்.
இந்த நிலையில் டெல்லியில் வரும் 18ஆம் தேதியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த அழைப்பு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஜி.கே. வாசன். வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கட்சி ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் தான் பங்கேற்கப்போவதாக கூறியுள்ளார். அன்புமணி ராமதாஸ் தனது நிலைப்பாடு குறித்து இன்னமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்!












Click it and Unblock the Notifications