இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல்
சென்னை: NDA கூட்டணியில் தொகுதி பங்கீடு கையெழுத்தாக உள்ள நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஐடிசி நட்சத்திர விடுதியில் இருந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் புறப்பட்டார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்.
அதிமுக மூத்த நிர்வாகிகளும் தலைமை அலுவலகம் வருகை தருகின்றனர். பியூஷ் கோயல் சற்று நேரத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து இன்றே கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என்று பியூஷ் கோயல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று சென்னை வந்த பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயில், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், "ஊழல் மிகுந்த, திறமையற்ற, தமிழ் விரோதப் போக்கைக் கொண்ட ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் வீழ்ச்சிக்கான தொடக்கத்தை நாம் முன்னெடுக்கும் வேளையில் தமிழ்நாட்டில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தவறான பொருளாதார நிர்வாகம் காரணமாக திமுக, தமிழகத்தை மிகக் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது. எனவே தீய சக்தியான திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எதிரான எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடங்கவுள்ளோம்.
திமுக காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சியால் தமிழ்நாட்டு மக்கள் சலிப்படைந்துவிட்டனர். மகாராஷ்டிரா, ஹரியானா, பீகார், டெல்லி என நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும், காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதைப் போலவே தமிழ்நாட்டிலும் தோல்வியைச் சந்திப்பார்கள்.
இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த அரசாங்கத் தலைவர் என்ற சாதனையை பிரதமர் மோடி நேற்று முறியடித்தார். அவரது வழிகாட்டுதலின் கீழ், தொலைநோக்குத் தலைமையின் கீழ் இயங்கும் ஒரு வலிமையான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை ஏற்க தற்போது தமிழ்நாடு தயாராக உள்ளது.
வருங்கால முதல்வரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையவுள்ள ஒரு அரசையே தமிழக மக்கள் விரும்புகின்றனர். அந்த அரசாங்கம் விவசாயிகள், மீனவர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற தொழில்துறையினருக்கு வளர்ச்சியைப் பெற்றுத்தரும். நமது இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கும்.
தரமான மருத்துவம் மற்றும் கல்வியை உறுதி செய்யும். ஏழை எளிய மக்களுக்கு வீடுகளை அமைத்துத் தரும். வாழ்வில் அனைவரும் முன்னேறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்து, ஒரு வளர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க அயராது பாடுபடும்.
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், நயினார் நாகேந்திரன், எல். முருகன், மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறோம். நாங்கள் அனைவரும் ஒரே அறையில் அமர்ந்து கலந்தாலோசித்து, தொகுதிப் பங்கீடு குறித்த முடிவை இன்றே உங்களுக்குத் தெரிவிப்போம்.
அனைத்து கூட்டணிக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து, பிரதமரின் தமிழக தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி நிரல் குறித்து முடிவெடுப்போம். இந்தத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறந்த ஆட்சியை வழங்கும்" என்று தெரிவித்தார்.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications