முதல் விக்கெட்.. பாஜக கூட்டணியில் இருந்து திடீரென விலகிய முக்கிய கட்சி.. பலத்தை காட்டிய திமுக!
சென்னை: என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் நாளை நடக்கவுள்ள நிலையில், திமுக மிகப்பெரிய சம்பவம் ஒன்றை செய்து முடித்திருக்கிறது. என்டிஏ கூட்டணியில் இருந்து வந்த தமிழர் தேசம் கட்சியை திமுக பக்கம் கொண்டு வந்து ஆச்சரியம் கொடுத்துள்ளது. அண்மையில் பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலையை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் தமிழர் தேசம் கட்சி பங்கேற்றிருந்த சூழலில், திடீரென திமுக பக்கம் வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் முத்தரையர் சமூகத்திற்கு தனியாக வாக்கு சதவிகிதம் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த லோக்சபா தேர்தலில் முத்தரையர் சமூக சங்கத்தின் ஆதரவை பெறும் வகையில் தமிழர் தேசிய கட்சியை அதிமுக கூட்டணியில் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முயற்சித்தார். குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவில் முத்தரையர் சமூக மக்கள் இருக்கின்றனர்.

இதனால் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியை தமிழர் தேசிய கட்சிக்கு ஒதுக்கலாம் என்று கணக்கிட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தமிழர் தேசம் கட்சி பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. இதையடுத்து அண்மையில் முத்தரையர் சமூக மக்களின் ஆதரவை பெறும் வகையில் பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலையை குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் செல்வக்குமார் கலந்து கொண்டார். இதன் காரணமாக சட்டசபைத் தேர்தலில் தமிழர் தேசம் கட்சி என்டிஏ கூட்டணி சார்பாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் என்டிஏ பொதுக்கூட்டம் நாளை நடக்கவிருக்கும் சூழலில், திடீரென தமிழர் தேசம் கட்சி திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.
இதுகுறித்து தமிழர் தேசம் கட்சி தலைவர் செல்வக்குமார் பேசுகையில், ஜனவரி 25ல் தமிழர் தேசம் கட்சி நடத்தும் முத்தரையர்களின் அரசியல் அதிகாரம் மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் வழங்கி அழைப்பு விடுத்துள்ளோம். அதேபோல் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணிக்கு எங்கள் ஆதரவை தெரிவித்துள்ளோம்.
தபால் தலையை வெளியிட மத்திய அரசுக்கு வலியுறுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். தமிழக பாஜகவினர் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மீனவர்கள் நல வாரியம் அமைப்போம் என்று கூறினார்கள். ஆனால் அமைக்கவில்லை.. நாங்கள் தொடர்ச்சியாக அலைபேசியில் அழைத்த போதும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
லோக்சபா தேர்தலில் பாஜக 18 சதவிகித வாக்குகள் பெற காரணமாக நாங்கள் தான் இருந்தோம். ஆனால் கொஞ்சம் கூட மரியாதை அளிக்கவில்லை. பாஜக தலைவர்களுக்கு எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை. 10 முறை செல்ஃபோனில் அழைத்தால், ஒருமுறை தான் எடுப்பார்கள். அதனால் திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம். தேர்தலில் போட்டியிட திமுகவிடம் சில தொகுதிகளை கோரியுள்ளோம். நிச்சயமாக போட்டியிடுவதற்கான வாய்ப்பை கொடுப்பதாக உறுதி கொடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.
-
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications