நாங்குநேரி இரட்டை கொலை! இது திராவிட மாடல் இல்லை! சாதிய மாடல்! நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்
சென்னை: நாங்குநேரியில் நடந்த ஜாதிய படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம் என நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை எஸ்சி- எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கண்டிக்கின்றோம்!கண்டிக்கின்றோம்! தமிழக அரசே, காவல் துறையே #நாங்குநேரியில் நடந்தேறிய ஜாதிய படுகொலையை வன்மையாக கண்டிக்கின்றோம்!
#நெல்லை_நாங்குநேரி பெரும்பத்து தலித் பகுதிக்குள் புகுந்து ஜாதிய பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரி வெட்டியதில் ஒரு இளைஞர் இறந்துள்ளார்.
பெரும்பத்து தலித்துகள் உட்பட வடமாநிலத்தைச் சேர்ந்த சில இளைஞர்களும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் பெருந்தெருவுக்குள் புகுந்து பெட்ரோல் குண்டு வீசி வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.
இக்கொடூர சம்பவத்திற்கு கோபம் அடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட வந்திருந்தனர், தமிழக அரசே உடனடியாக ஆதிக்க சாதி வெறியர்கள் மீது SC, ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய், நெல்லை ஆட்சியர், மாவட்டத்திலுள்ள சாதிய ஆதிக்க போக்கை கட்டுப்படுத்த வேண்டும், தலித் மக்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைகள் தொடர்பாக 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications