கொரோனா அச்சத்திற்கு இடையே.. கடும் கெடுபிடிகளுடன்.. நாடு முழுவதும் நடந்து முடிந்தது நீட் தேர்வு
கொரோனா அச்சத்திற்கு இடையே நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. 15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதியுள்ளனர்.
சென்னை: இளங்கலை மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு கொரோனா அச்சத்திற்கு இடையே இன்று நடந்து முடிந்து உள்ளது. நாடு முழுவதும் 3,842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 238 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 900 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்து பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வற்புறுத்தி வந்த சூழ்நிலையில் இன்று நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வை ரத்து செய்யவும் ஒத்திவைக்கவும் கோரி தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதை அடுத்து இன்று நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் பல இடங்களில் நீட் தேர்வு நடைபெற்ற மையங்களின் முன்பு போராட்டங்கள் நடைபெற்றன.

நீட் தேர்வு மையங்களுக்கு வந்த மாணவர்களுக்கு காலை முதலே பலத்த சோதனை நடைபெற்றது. 11 மணிக்கே பலத்த கெடுபிடிகளுடன் மையங்களுக்குள் மாணவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

இந்த நிலையில் நீட் தேர்வு பயத்தால் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் கடந்த 9ஆம் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அந்த சோகம் மறைவதற்குள் நேற்று மதுரையில் ஒரு மாணவியும், தர்மபுரியில் ஒரு மாணவரும், திருச்செங்கோட்டில் ஒரு மாணவரும் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 4 உயிர்களை பலிவாங்கியிருக்கிறது நீட் தேர்வு.

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், தைரியமாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்களும், மனநல நிபுணர்களும் ஆலோசனையும் அறிவுரையும் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கிளவுஸ், தண்ணீர் பாட்டில், சானிடைசர் என தனித்தனியாக பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுதும் அறைக்குள் நுழையும் முன்பாக கொடுக்கப்படும் முக கவசத்தை புதிதாக மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்களும் அமைக்கக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்போரை தேர்வுப் பணிகளில ஈடுபடுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.
மாணவர்களும், கண்காணிப்பாளர்களும் தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் உடல்வெப்ப சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். மாணவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

மாணவர்களுக்கு இடையே 6 அடி தூர இடைவெளி இருக்க வேண்டும். தேர்வு முடிந்த பின் மாணவர்கள் ஒவ்வொருவராக மட்டுமே வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ படிப்பு மட்டுமே படிப்பு அல்ல என்று கூறியுள்ள கல்வியாளர்கள் மாணவர்கள் தேர்வுகளை தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications