நீட் நுழைவு தேர்வு நாளை தொடக்கம்..மறந்தும் ‘இந்த’ விஷயங்களை செய்யாதீர்கள் மாணவர்களே! ஆல் தி பெஸ்ட்!
சென்னை: 2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை தொடங்கவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வை ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மே 5ஆம் தேதியான நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடத்த உள்ளது.

இதற்கான அனுமதி அட்டைகள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியுடன் இணையதளத்தில் லாகின் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நீட் தேர்வு: இந்நிலையில் நாளை நடத்தப்படும் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மதியம் 1.30 மணிக்குள் மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களுக்குள் வந்து விட வேண்டும் என்றும், அதனின் மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என NTA அறிவுறுத்தியுள்ளது. நாளை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ட்ரெஸ் கோட் எனப்படும் ஆடை கட்டுப்பாடும் என்டிஏ சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட்: நாடு முழுவதும் 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெறுகிறது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தவர்களில் 95% மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய தேர்வு முகமை: தேர்வை எழுதும் மாணவர்கள் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது மதியம் 12 மணிக்கு தேர்வு மையங்களுக்கு வந்து விட வேண்டும் அனைத்து மாணவர்களும் கடுமையான சோதனைகளுக்கு பிறகு தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் பெண் மாணவர்களை பெண் பணியாளர்கள் மூடப்பட்ட அறைகளில் சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது மேலும் தேர்வின் முதல் ஒரு மணி நேரத்திலும் கடைசி அரை மணி நேரத்திலும் பயோ பிரேக் எதுவும் அனுமதிக்கப்படவில்லை எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. முறைகேடுகளை தவிர்க்க பயோமெட்ரிக் ஆட்டோமேட்டிகேசன் முறையையும் தேசிய தேர்வு முகமை கடைபிடிக்கிறது
இந்த நிலையில் நீட் தேர்வின் போது என்டிஏ சொல்லியுள்ள ஆடை கட்டுப்பாடுகள் உள்ளிட்ட விஷயங்களை பார்க்கலாம்:-
செய்யக் கூடாதவை:
1. நீண்ட கைகளுடன் கூடிய ஆடைகள் அணிந்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படாது. எனவே அரைக்கை சட்டை அணிந்து செல்ல வேண்டும்
2.ஹீல்ஸ் இல்லாத செருப்புகள் மற்றும் ஷூக்கள் மட்டுமே அணிந்து செல்ல வேண்டும்( ஹீல்ஸ் இருக்கும் ஷூக்களுக்கு அனுமதி வழங்கப்படாது)
3..பர்சுகள், கண்ணாடிகள், கைப்பைகள், பெல்ட், தொப்பி போன்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை
4.கைக்கடிகாரம், வளையல், கேமரா, ஆபரணங்கள், மற்றும் உலோக பொருட்களும் தடை செய்யப்பட்டு இருக்கின்றன
5. மின்னணு சாதனங்கள், மொபைல் போன்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு அனுமதி இல்லை.
கொண்டு செல்ல வேண்டியவை:
1.நீட் யுஜி 2022 அட்மிட் கார்டு
2. தேர்வு மைய விவரங்கள்
3. பயோடேட்டா
4.உறுதிமொழி படிவம்
5.அஞ்சலட்டை அளவு புகைப்படம்
6..புகைப்பட அடையாளச் சான்று ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம்
-
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications