நீட் தேர்வு எழுத போறீங்களா? மறந்தும் இந்த விஷயங்களை பண்ணிடாதீங்க மாணவர்களே! ரெம்ப கவனமா இருக்கணும்!
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்காக தேசிய தேர்வு முகமை நாடு முழுவதும் 4ஆம் தேதி நீட் தேர்வை நடத்துகிறது. நாடு முழுவதும் 23 லட்சத்திற்கும் அதிகமானோரும், தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத இருக்கின்றனர். இந்த நிலையில் நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அது என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திற்கு முன் இந்த தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்பதால் மாணவர்கள் அதற்காக தயாராகி வருகின்றனர். நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு தான் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடக்கிறது நாடு முழுவதும் இந்த தேர்வை 23 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுத உள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, ஈரோடு நாமக்கல் உள்ளிட்ட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. சென்னையில் மட்டும் 41 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம் நீட் தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதனை 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என nta கூறியுள்ளது.
மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதில் சுமார் 15 ஆயிரம் பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள் என கூறப்படுகிறது. நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட மொத்தம் 13 மொழிகளில் நடைபெறுகிறது.
நீட் தேர்வு தொடர்பாக முறைகேடுகளை தடுக்க மாணவ மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவிகள் அந்த விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஹால் டிக்கெட், எழுதுகோல் உள்ளிட்டவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மதம், கலாச்சாரம் சார்ந்த ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவ மாணவிகள் மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின், கண்ணாடி, தாயத்து, பெல்ட் அணியக்கூடாது.
உயரம் குறைந்த ஹில்ஸ் இல்லாத செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும். அதிக உயரம் கொண்ட ஷூக்கள், காலணிகள் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. நண்பகல் ஒரு மணி முதலே கடும் சோதனைகளுக்கு பிறகு மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications