டச் பண்ண முடியாது.. எங்களை அலட்சியப்படுத்தாதீங்க.. வள்ளுவர்கோட்டத்தில் சீறிய உதயநிதி.. கவனித்த பாஜக
சென்னை: நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி திமுகவின் அடுத்த அதிரடி ஆரம்பமாகி உள்ளது. அந்தவகையில், திமுக இளைஞரணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும், மாபெரும் கையெழுத்து இயக்கம் ஆரம்பமாக உள்ளது.
கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாககூறி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று திமுக சார்பில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், திமுக இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளது.. அதனால்தான், இந்தகோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பாக நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்க போவதாக 2 நாட்களுக்கு முன்பே அறிவித்தது.
இது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். இதற்கு பிறகு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் இதனை உறுதி செய்திருந்தார்.

இளைஞர் அணி: "தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் - நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் சிதைத்து வருகிற நீட் தேர்வுக்கு முடிவு கட்டிட திராவிட மாடல் அரசும், தி.மு.கழகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடத்திய உண்ணாநிலை அறப்போரை தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கவுள்ளோம்" என்று அறிவித்திருந்தார்.
அந்தவகையில், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார்.. நிகழ்ச்சிக்கு மருத்துவர் அணி செயலாளர் எழிலன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி., மருத்துவர் அணி தலைவர் கனிமொழி என்விஎன் சோமு எம்பி ஆகியோர் முன்னிலை வகித்தார்.. மாணவர் அணி இணை செயலாளர் எஸ்.மோகன் வரவேற்றார்.

உதயநிதி பேச்சு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: "நீட் விலக்குதான் எங்கள் இலக்கு என்று தொடர்ந்து போராடி வருகிறோம். நீட் தேர்வால் தரமான டாக்டர்கள் கிடைப்பார்கள் என்றார்கள். மருத்துவ கல்லூரிகளில் பணம் கொடுத்து சேருவது தடுக்கப்படும் என்றும் சொன்னார்கள். ஆனால் முதுகலை பட்டப்படிப்பில் நீட் தேர்வில் முட்டை மதிப்பெண் எடுத்தாலும் பணம் கொடுத்து சேர முடியும் என்பதைதான் உருவாக்கி இருக்கிறார்கள்.
தமிழர்கள் பிரச்சனை: எல்லோரும் சேர்ந்து போராடுவோம் வாருங்கள்... கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுங்கள். முன்பு பாஜக கூட்டணியில் இருந்ததால் வரமுடியவில்லை. இப்போது வெளியே வந்துவிட்டீர்கள்.. தமிழர்களின் உரிமையை காக்க வாருங்கள். இதை வெறும் திமுகவின் பிரச்சனை என்று யாரும் கருத வேண்டாம். இது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சனை.. எவ்வளவு வலிமையான கட்சியாக இருந்தாலும் பாஜகவால் தமிழர்களின் இதயத்தை தொட முடியாது" என்றார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications