சீறிய முதல்வர்.. "சான்ஸை விட்டுட்டீங்க.. தைரியம் இல்லைன்னு சொல்லுங்க".. திகைத்த எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்
சென்னை: சிஏஏ, வேளாண் சட்டங்களை கொண்டு வந்தபோது வாக்களிக்க அதிமுக தயவை மத்திய அரசு நாடியதை பயன்படுத்தி நீட் தேர்வு விலக்கு ஒரு நிபந்தனையாக வைத்திருக்கலாம்.. சான்ஸை விட்டுட்டீங்க.. உங்களுக்கு தைரியம் இல்லைன்னு சொல்லுங்க" என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
திமுக ஆட்சி பொறுப்பேற்றதுமே, நீட் தேர்வு விவகாரத்தை அதிமுக கிளறி எடுக்கும் என்றாலும், தனுஷ் மரணம் அதை மேலும் பலமாக்கிவிட்டு சென்றுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு முதலே தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.. அதற்கேற்றபடி, தமிழகத்தில் மட்டும் இதுவரை 14 மாணவர்கள் நீட் தேர்வு தொடர்பாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. அதாவது தமிழகத்தில்தான் நீட் தேர்வினால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மத்திய அரசு
இந்த நீட் தேர்வுக்கும், அதையொட்டிய தற்கொலைகளுக்கும் திமுகதான் காரணம் என்று அதிமுக சொல்லி வருகிறது.. ஆனால், மத்திய அரசுதான் காரணம் என்று திமுக குற்றஞ்சாட்டி வருகிறது.. இப்படி இருவரும் மாறி மாறி பழியை தூக்கி போட்டுக் கொண்டு வரும் நிலையில், அதிமுக இந்த விவகாரத்தில், தங்களுக்கு சம்பந்தமே இல்லாதது போல நடந்து கொண்டும் வருகிறது.. அதற்கு உதாரணம்தான் இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள்.

வாக்குறுதி
இன்றைய சட்டமன்றத்தில் நீட்டிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.. ஆனாலும் திமுக மீது அதிமுக பழியை போட்டுள்ளது.. நீட் தேர்வு விலக்கு என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக ஏன் நிறைவேற்றவில்லை, அதனால்தான், தனுஷ் மரணம் ஏற்பட்டுள்ளது என்று பகிரங்கமாகவே எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்...

ஆவேசம்
பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் எடப்பாடி பேசும்போது, திமுக எம்பி ஆ.ராசா, அதிமுக அரசால் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை கண்டித்து பேசிய வீடியோவை காட்டி, இப்போதைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை ஒப்பிட்டும் கேள்வியை எழுப்பி உள்ளார்.

ஸ்டாலின்
ஆனால், முதல்வர் ஸ்டாலினோ எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.. அவர் பேசும்போது, "மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய இவர், முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டது. 'நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்று இதே சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதும், எதிர்க்கட்சித் தலைவரான இவர், முதலமைச்சராக இருந்தபோதுதான். நீட் தேர்வு அச்சத்தில், அனிதா உள்பட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது உங்கள் ஆட்சியில்தான்.

சான்ஸ்
குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் மசோதாவை இந்த அவைக்குச் சொல்லாமல் மறைத்ததும் அதிமுக ஆட்சிதான். இப்போது உயிரழந்த மாணவர் தனுஷ் இருமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததும் நீங்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான்.. ஒன்றிய அரசுடன் கூட்டணியாக இருந்தீர்கள். இப்போதும் இருக்கிறீர்கள். சிஏஏ மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலை வந்தபோது, பாஜக கூறியபோது, நீட் தேர்விற்கு விலக்கு தர வேண்டுமென்று அதிமுக நிபந்தனை விதித்து இருக்கலாம். அந்த தெம்பு, திராணி அதிமுகவிற்கு இல்லை. அதைச் செய்திருந்தால், நீட் தேர்வுக்கு ஓரளவிற்கு விலக்கு கிடைத்திருக்கும்" என்றார்.

திமுக
இப்படி அதிமுக, திமுக இரு தரப்புமே ஒருவருக்கொருவர் இந்த விஷயத்தை சாடி வந்தாலும், இனி நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்து என்னாகும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.. காரணம், தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை ஏற்கும் முடிவு மத்திய அரசிடம்தான் உள்ளது... இப்போது தீர்மானம் கொண்டு வந்தது, ஒருவேளை திமுகவின் உச்சபச்ச அழுத்தத்தை வெளிக்காட்டுவதாக இருக்கலாம்.. ஆனால் அதுவே தீர்வாகுமா என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பி வருகின்றனர்.

பொதுப்பட்டியல்
அதாவது, "கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது.. நீட் தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மாநில அரசு சட்டம் இயற்றி அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்துவிட்டால் செல்லுபடியாகும் என்றும், நீட் தேர்வுக்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. மாநிலத்தில் சட்டம் இயற்றிய பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது என்பது அடுத்தகட்டமான நடவடிக்கையாக இருக்கும்" என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.

என்ன தீர்வு?
"சுப்ரீம்கோர்ட் உத்தரவுபடி, நாடாளுமன்றத்தில் நிறைவேறிய சட்டம் ஆகியவற்றை சட்டமன்றம் மீறுவதற்கான வாய்ப்புகள் இல்லை, மாநில சட்டசபையில் தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பலாம்., ஆனால், மத்திய அரசு இதனை ஏற்றுக் கொள்வதற்கு வாய்ப்பில்லை" என்று இன்னொரு தரப்பு சொல்கிறது... ஆக, எப்படி பார்த்தாலும், நீட் தேர்வு விவகாரமானது, திமுகவுக்கு சிக்கலை ஒருபக்கம் தந்து வருகிறது.. அதேசமயம், இதை வைத்து அரசியலாக்கும் முயற்சியில் அதிமுகவும் களமிறங்கி உள்ளது.. ஆனால், இதற்கு என்னதான் தீர்வு? என்பதுதான் தற்போதைய அனைவரின் கேள்வியாகவும் எழுந்துள்ளது.
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்?












Click it and Unblock the Notifications