பிள்ளைகளுக்கு தோல்வியை தாங்கக்கூடிய சக்தியை பெற்றோர்கள் சொல்லிக்கொடுங்கள் - மு க ஸ்டாலின்
மாணவர்களே கெஞ்சிக் கேட்கிறேன், இனி யாரும் தற்கொலை முடிவு எடுக்காதீர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: பெற்றோர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்..பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து பயப்படுவது நியாயம்தான். ஆனால், அதே பிள்ளைகளுக்கு மன உறுதியையும், தோல்வியை தாங்கக்கூடிய சக்தியையும் சொல்லிக்கொடுங்கள் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. 15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் ஜோதிஸ்ரீதுர்கா, ஆதித்யா, மோதிலால் ஆகியோர் ஒரேநாளில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதேநேரத்தில் மாணவர்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நீட் தேர்வு மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் பணிவான வேண்டுகோள். நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முறை செய்தியை கேட்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன், இனி யாரும் தற்கொலை முடிவு எடுக்காதீர்கள்
பெற்றோர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்..பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து பயப்படுவது நியாயம்தான். ஆனால், அதே பிள்ளைகளுக்கு மன உறுதியையும், தோல்வியை தாங்கக்கூடிய சக்தியையும் சொல்லிக்கொடுங்கள்.
நீட் தேர்வு முடிவு எப்படி இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தைரியம், தன்னம்பிக்கையை கொடுங்கள் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள்.. பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்! தர்மேந்திர பிரதான் உருக்கம்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications