Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த மீட்டிங்.. தமிழிசை ஆக்சன்.. ஆளுநர் ரவி திடீர்ன்னு ஏன் இவரை சந்திக்கிறார்? என்னதான் நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி திடீரென நடத்திய சந்திப்பு ஒன்று அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு முதலில் இயற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பினார். குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பாமல் ஆளுநர் இதை மீண்டும் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார்.

ஆனால் இந்த மசோதாவை மீண்டும் தமிழ்நாடு சட்டசபையில் திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. அதோடு மீண்டும் ஆளுநருக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டுள்ளது.

நீட் மசோதா

நீட் மசோதா

நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய போது அதை தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. முக்கியமாக ஆளுநர் அலுவலகம் முன் திக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தின. ஆட்டுக்கு ஏன் தாடி என்ற அண்ணாவின் பிரபல வாசகத்தை கூறி முதல்வர் ஸ்டாலினும் கூட ஆளுநரை விமர்சனம் செய்தார். அதற்கு முன்பாகவே இது நாகலாந்து அல்ல.. தமிழ்நாடு என்று திமுகவின் முரசொலி பத்திரிக்கையும் விமர்சனம் செய்து இருந்தது.

ஆளுநர் எதிர்பார்க்கவில்லை

ஆளுநர் எதிர்பார்க்கவில்லை

தமிழ்நாட்டில் நீட் மசோதாவை திருப்பி அனுப்பினால் இந்த அளவிற்கு எதிர்ப்பு வரும் என்று ஆளுநர் ரவி எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. தேசிய அளவிற்கு ஆளுநருக்கு எதிராக டிரெண்ட், ஆளும் கட்சியின் விமர்சனம் என்று கடுமையான எதிர்ப்பு தனக்கு எதிராக எழும் என்று ஆளுநர் ரவி எதிர்பார்க்கவில்லை என்று ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்தே ஆளுநர் ஆர். என் ரவி டெல்லி போக திட்டமிட்டு இருந்தார். தமிழ்நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை பற்றி விவாதிக்க டெல்லி போக திட்டமிட்டு இருந்தார்.

டெல்லி பிளான்

டெல்லி பிளான்

அதாவது டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் இதை பற்றி ஆலோசனை செய்ய ரவி திட்டமிட்டு இருந்தார். ஆனால் அமித் ஷா இந்த விவகாரத்தில் அவ்வளவு ஈடுபாடு காட்டவில்லை என்று கூறப்படுகிறது. 5 மாநில தேர்தல் பணிகள் நடக்கிறது, பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதங்கள் நடக்கின்றன. இப்போது நீட் விவகாரம் பற்றி பேச முடியாது என்பதால் அமித் ஷா நேரம் ஒதுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆளுநரின் பயணம் கடைசியில் ரத்து செய்யப்பட்டது.

குழப்பம்

குழப்பம்

இந்த நிலையில்தான் ஆளுநர் தற்போது நீட் மசோதாவை கண்டிப்பாக ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநருக்கு இப்போது வேறு வாய்ப்பு இல்லை. ஆனால் ஆளுநர் சில மாதங்கள் தள்ளிப்போட்டு பின் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். ஆனால் திமுக பெரும்பாலும் இதற்கு எதிராக வழக்கு தொடுத்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. நீதிமன்றம் பொதுவாக ஆளுநர் ஒருவர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது.

நீதிமன்றம்

நீதிமன்றம்

ஆனால் ஆளுநர் கொஞ்சம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் அறிவுரை வழங்கலாம். இதற்கு முன் பல மாநில ஆளுநர்களுக்கு இது போன்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பல மாநில ஆளுநர்கள் நீதிமன்ற அறிவுரைக்கு பின் உடனடியாக மசோதாக்கள் மீது தங்கள் முடிவை எடுத்து இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசும் இதே மாதிரியான சட்ட போராட்டத்தை ஆளுநர் ரவிக்கு எதிராக எடுக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை ஆர். என் ரவி சந்தித்து இருக்கிறார்.

தமிழிசை ரவி சந்திப்பு

தமிழிசை ரவி சந்திப்பு

திடீரென தெலுங்கானாவிற்கு பயணம் மேற்கொண்ட ஆர். என் ரவி அங்கு ஆளுநர் தமிழிசையை சந்தித்துள்ளார். இதில் தமிழ்நாடு அரசியல் குறித்து இவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு ஏன் இப்படி அதிகமாக இருக்கிறது என்பது உள்ளிட்ட விஷயங்களை இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியது சட்டப்படி செய்த நடவடிக்கைதான், ஆளுநருக்கு இதில் முழு உரிமை இருக்கிறது என்று ஏற்கனவே தமிழிசை குறிப்பிட்டு இருந்தார்.

அடுத்த கட்ட நடவடிக்கை

அடுத்த கட்ட நடவடிக்கை

இந்த நிலையில்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழிசையிடம் ரவி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.. தமிழிசை சௌந்தராஜன் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவர். தமிழ்நாட்டின் அரசியல் நன்றாக தெரிந்தவர். ஆளுநர் பணிகளிலும் அனுபவம் கொண்டவர் என்பதால் ரவி இந்த சந்திப்பை நடத்தியதாக கூறப்படுகிறது. அதேபோல் குடியரசுத் தலைவர் ரேஸில் தமிழிசை சௌந்தரராஜன் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஆளுநர் ரவியின் இந்த சந்திப்பு அதிகம் முக்கியத்துவம் பெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+