அடுக்கடுக்காய் ஒரே நாளில் 3 "நீட்" தற்கொலைகள்.. தேர்வை உடனே ரத்து செய்க.. வேல்முருகன் வேண்டுகோள்
தமிழகத்தில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் ஆற்றொணா துயரத்தை அளிக்கிறது என்று வேல்முருகன் தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் ஆற்றொணா துயரத்தை அளிக்கிறது என்று வேல்முருகன் தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.
நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தேர்வு அச்சம் காரணமாக இன்று தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன்பின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழகத்தை இந்த தற்கொலைகள் உலுக்கி உள்ளது. தமிழகத்தில் தொடரும் நீட் மரணங்கள் குறித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அடுக்கடுக்காய் ஒரே நாளில் மூன்று "நீட்" தற்கொலைகள்.நீட் தேர்வு பயத்தால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே திரு.மோதிலால். என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவரது பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் ஆற்றொணா துயரத்தை அளிக்கிறது. நீட் தேர்வு இந்தியா முழுவதும் ரத்து செய்யப்படுவது மட்டுமே மாணவ மாணவிகளின் தற்கொலைக்கு உடனடித் தீர்வாக அமையும்.
இனியும் மத்திய மாநில அரசுகள் இவற்றைக் கண்டும்காணாமல் கடந்து செல்லும் போக்கைக் கைவிட்டு மாணாக்கர்களின் உயிரை காப்பாற்ற நீட் தேர்வை ரத்து செய்யும் முடிவை காலம் தாழ்த்தாமல் விரைந்து எடுத்திட வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், என்று வேல்முருகன் தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications