ஒரே நாளில் 3 தற்கொலைகள்.. நிலைமையின் தீவிரத்தை உணருங்கள்.. நீட்டிற்கு எதிராக கொதிக்கும் ராமதாஸ்!
நீட் தேர்வு தொடங்கப்படுவதற்கு முந்தைய நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் நிலைமையின் தீவிரத்தை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்
சென்னை: நீட் தேர்வு தொடங்கப்படுவதற்கு முந்தைய நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் நிலைமையின் தீவிரத்தை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்தடுத்து ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரே நாளில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தேர்வு அச்சம் காரணமாக இன்று தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன்பின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழகத்தில் இந்த தற்கொலைகள் காரணம் மீண்டும் நீட் எதிர்ப்பு விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இந்த நிலையில் இந்த தற்கொலை தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ள இரங்கலில், நீட் தேர்வை எதிர்கொள்வதில் உள்ள அச்சம் காரணமாக நாமக்கல் நகரத்தைச் சேர்ந்த மோதிலால் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் அச்சம் காரணமாக ஒரே நாளில், அதுவும் நீட் தேர்வு தொடங்கப்படுவதற்கு முந்தைய நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் நிலைமையின் தீவிரத்தை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்; நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கப்பட வேண்டும், என்று தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications