Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

800க்கு 4 மதிப்பெண் எடுத்தாலும்.. முதுநிலை மருத்துவம் படிக்க சான்ஸ்! ‛நீட்' தேர்வின் அவலத்தை பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் 800க்கு 47 மதிப்பெண், 800க்கு 44, 47 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நம் நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு என்பது இளநிலை படிப்புக்கு தனியாகவும், முதுநிலை படிப்புக்கு தனியாகவும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வில் பாஸானால் மட்டுமே மருத்துவ படிப்புகளை படிக்க முடியும் என்ற நிலை உள்ளது.

neet-pg-cutoff-candidates-who-gets-4-marks-out-of-800-gets-orthopaedics-seat-at-a-government-instit

இந்த நீட் தேர்வுக்கு திமுக உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து திமுக கூறி வருகிறது. ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு மறுத்து வருகிறது.

3ம் கட்ட கவுன்சிலிங்

இதற்கிடையே தான் 2025ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியானது. இதனைத்தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 2 கட்ட கலந்தாய்வு நடைபெற்ற போதிலும், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 18,000 முதுநிலை மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. தற்போது நீட் முதுநிலை படிப்புக்கான 3ம் கட்ட கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது.

ஒற்றை இலக்க மதிப்பெண்ணுக்கு இடம்

இப்படியான சூழலில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது முதுநிலை பிரிவில் எம்டி (Doctor of Medicine) மற்றும் எம்எஸ் (Master of Surgery) உள்ளிட்ட அதிக முக்கியத்துவம் வாய்ந்த அதேநேரத்தில் High Risk-க்கான மருத்துவ பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்நிலையில் தான் 3ம் கட்ட கவுன்சிலிங்கில் நீட் தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை கொண்டு நிரப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது 3வது சுற்று கவுன்சிலிங்கின்போது 800க்கு ஒற்றை இலக்கம் மற்றும் இரட்டை இலக்கத்தில் மதிப்பெண் பெற்ற பலருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் கிடைத்துள்ளது.

4 மதிப்பெண் பெற்றவருக்கு இடம்

அதன்படி 800 மதிப்பெண்ணுக்கு 4 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு ரோத்தாக்கில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் எலும்பியல் Orthopaedics (MS) அறுவை சிகிச்சை சார்ந்த படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது.

அதேபோல் 800க்கு 44 மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு டெல்லியில் உள்ள ஒரு முன்னணி மருத்துவ கல்லூரியில் மகப்பேறு மருத்துவம் (Obstetrics and Gynaecology - MD/MS) படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 800க்கு 47 மதிப்பெண் ஒருவருக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் பொது அறுவை சிகிச்சைக்கான (General Surgery -MS)படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது.

நீட் தேர்வின் நோக்கம் சிதைவு

இது, மத்திய அரசு நீட் தேர்வு கொண்டு வந்ததற்கான நோக்கத்தை சிதைக்கிறது. தகுதியான மற்றும் திறமையான நபர்களுக்கு தான் மருத்துவ கல்லூரியில் சீட் கிடைக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பை பயில வாய்ப்பு வழங்க வேண்டும். அதிக பணத்துக்காக மருத்துவ சீட் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.

ஆனால் முதுகலை நீட் தேர்வில் காலிப்பணியிடங்கள் 800க்கு ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வழங்கப்படுவது அதன் நோக்கத்தை குறைப்பதாக விவாதம் கிளப்பி உள்ளது.

நோயாளிகளுக்கு அச்சுறுத்தல்

இதுபற்றி மூத்த அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் கூறுகையில், ‛‛இது மருத்துவ துறையில் பெரிய பின்னடைவாகும். மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு எலும்பியல் போன்ற சவாலான துறையில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்றால் நமது மருத்துவ கட்டமைப்பு எவ்வளவு பெரிய அழுத்தத்தில் உள்ளது என்பதை தான் இது காட்டுகிறது'' என்றார்.

இதுபற்றி டாக்டர் ஒருவர் கூறுகையில், ‛‛அறுவை சிகிச்சை மற்றும் பிற மருத்துவ பிரிவுகளில் பிரிவுகள் மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் நிரப்பப்படுவது, கல்வித் தரங்கள் மிகவும் சீரழிந்துவிட்டதையே காட்டுகிறது. 4, 11, 44, 47 போன்ற மதிப்பெண்கள் அடிப்படை திறமையின்மையையே காட்டுகிறது. தகுதி மதிப்பெண் வரம்புகளை நீக்குவது நோயாளிகளின் பாதுகாப்பிற்கு நேரடியான அச்சுறுத்தலாகும்" என்று விமர்சனம் செய்துள்ளது.

கட்-ஆப்பை குறைத்த மத்திய அரசு

முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு ஜூலையில் கட்ஆப் மதிப்பெண்களை குறைக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை மத்திய அரசு கடுமையாக விமர்சனம் செய்தது. குறைந்தபட்ச தகுதி என்பது மருத்துவக் கல்வி தரங்களைப் பராமரிக்க அவசியமானது என்று வாதிட்டது.

அதேபோல் டெல்லி உயர்நீதிமன்றமும் மருத்துவ துறை என்பது உயிர் சம்பந்தப்பட்ட துறை என்பதால், தரத்தைக் குறைப்பது சமூகத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என்று நீதிமன்றமும் அப்போது கடுமையாக எச்சரித்தது. அத்துடன், மத்திய அரசின் வாதத்தையும் ஏற்றுக்கொண்டது.

நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு

ஆனால் தற்போது மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளது. 2025-26 கல்வி ஆண்டில் முதுகலை நீட் மூன்றாம் கட்ட கலந்தாய்வின் கட்-ஆஃப் மதிப்பெண்ணை மத்திய அரசு குறைத்து அறிித்தது.

அதன்படி, பொதுப்பிரிவினருக்கு 7 சதவிகிதமாகவும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகிதமாகவும், எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவினருக்கு 0 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 800 மதிப்பெண்களுக்கு -40 மதிப்பெண்கள் பெற்றவர்களும் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இதனால், இந்த சர்ச்சைக்கு மத்திய அரசு தான் முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் உருவாகி உள்ளது. ஏனென்றால், மத்திய சுகாதார அமைச்சகம் 2025-26 கல்வி ஆண்டுக்கான நீட் - முதுநிலை படிப்புக்கான(NEET-PG) தகுதி மதிப்பெண் வரம்புகளை குறைத்தது. கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டு, மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களும் கூட தகுதி பெற்றுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+