என்னங்க இது? நீட் PG தேர்வு எழுத 700 கி.மீ போகனுமா? தேர்வு மைய ஒதுக்கீட்டை ரத்து செய்யுங்க.. ராமதாஸ்
சென்னை: முதுநிலை நீட் தேர்வு மிகவும் கடினமானது. வினாக்களை நன்கு உள்வாங்கி விடை எழுதினால் தான் தேர்ச்சி பெற முடியும். எனவே அதற்கு மன அமைதி தேவை. ஆனால், தேர்வு மையத்திற்காக பல நூறு கி.மீ பயணிக்க வேண்டியதிருந்தால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, தேர்வில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, தேர்வு மைய ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2024-25- ஆம் கல்வியாண்டில் அரசு, தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ போன்ற முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் தேர்வர்கள் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தை பொறுத்தவரையில் சுமார் 25 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி இந்த தேர்வு நடத்தப்பட இருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் இரவு தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 185 மையங்களில் நடைபெற உள்ளது. முன்னதாக 259 மையங்களாக இருந்ததை தற்போது 185 மையங்களாக தேசிய தேர்வு முகமை குறைத்துள்ளது. இதனால், தேர்வர்களுக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
அதாவது, விருப்ப மையங்களை கேட்டு இருந்த தேர்வர்கள் பலருக்கும் சுமார் 500 கி.மீ. முதல் 1,000 கி.மீ. வரையிலான தொலைவில் தேர்வு மையங்களை தேர்வை நடத்தும் தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் ஒதுக்கீடு செய்து இருப்பதாக தேர்வர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், தேர்வு மைய ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
இந்தியா முழுவதும் வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள முதுநிலை நீட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, அவர்களின் தேர்வு மையம் அமைந்துள்ள நகரங்களின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பல மாணவர்களுக்கு அவர்களின் மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திலும், வேறு பலருக்கு 700 கி.மீக்கு அப்பாலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. கடந்த ஜூன் மாதம் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பல தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டன. அதனால் நீட் தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்திருந்த மாணவர்கள் அனைவரும் தேர்வு மையங்களை தேர்ந்தெடுப்பதற்காக மீண்டும் விண்ணப்பித்தனர்.
மொத்தம் 4 நகரங்களை தேர்வு செய்யும்படி அவர்களை கேட்டுக் கொண்ட தேசிய தேர்வு வாரியம், அவற்றில் ஒன்று ஒதுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தது. ஆனால், பல மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு செய்த 4 நகரங்களில் எதையும் ஒதுக்காமல் தொலைதூரத்தில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு மாணவருக்கு 500 கி.மீக்கும் அப்பால் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டால், அவர் அந்த மையத்திற்கு குறைந்தது இரு நாட்கள் முன்னதாக செல்ல வேண்டும்.
அங்கு அறை எடுத்து தங்க வேண்டும். அதற்காக பெருந்தொகை செலவழிக்க வேண்டும். மாணவிகள் என்றால் இன்னும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டும். ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வுக்காக அனைத்து மாணவர்களும் தேர்வு மையத்திற்கு சென்று விட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் தான் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால், ஒவ்வொரு மாணவரும் பயணச் செலவு, தங்குமிடம் ஆகியவற்றுக்காக பல்லாயிரம் ரூபாயை செலவழித்தனர். அவர்களால் மீண்டும் அதேபோல செலவு செய்ய முடியாது.
முதுநிலை நீட் தேர்வு மிகவும் கடினமானது. வினாக்களை நன்கு உள்வாங்கி விடை எழுதினால் தான் தேர்ச்சி பெற முடியும். அதற்கு மன அமைதி தேவை. ஆனால், தேர்வு மையத்திற்கான பல நூறு கி.மீ பயணிக்க வேண்டிய நிலை இருந்தால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, தேர்வில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, தேர்வு மைய ஒதுக்கீடுகளை ரத்து செய்து விட்டு, மாணவர்களை விருப்பம் தெரிவித்துள்ள 4 தேர்வு மையங்களில் ஒன்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications