முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பால் மருத்துவர்கள் விரக்தி.. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: நெட் தேர்வை தொடர்ந்து, முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தேர்வு ஒத்திவைப்பால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் விரக்தி அடைந்துள்ளனர். மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்காக நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் பெரும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு, தேர்வு முடிவுகள் குளறுபடிகள் சார்ந்து ஏராளமான மாணவர்களால் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் இந்த குற்றச்சாட்டுகளை தேசிய தேர்வு முகமை மறுத்து வந்தது. அதேவேளையில், இந்த முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தேர்வில் முறைகேடு நடைபெற்றதை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டார். நெட் தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத்தொடர்ந்து அந்த தேர்வும் ரத்துசெய்யப்பட்டது.
இந்த பரபரப்புகளுக்கு இடையே, தேசிய தேர்வு முகமை தலைவராக இருந்த சுபோத் குமாரை நேற்று திடீரென்று மத்திய அரசு நீக்கியது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், இந்திய வர்த்தக மேம்பாட்டு தலைவரான பிரதீப் சிங் கரோலியாவுக்கு தேசிய தேர்வு முகமை தலைவர் பொறுப்பு கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில், மருத்துவ மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் பிஜி தேர்வும் தள்ளிவைக்கப்படுவதாக நேற்று இரவு அறிவிப்பு வெளியானது.
இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய தேர்வு முகமை செய்து வந்தது. ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு தேர்வு மையங்களும் தயார் நிலையில், வைக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று இரவு திடீரென தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில், நீட் பிஜி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக வந்து இருக்கும் செய்தி பல ஆயிரக்கணக்கான மாணவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
யுஜிசி நெட் தேர்வு தொடர்ந்து முது நிலை நீட் தேர்வையும் மத்திய அரசு ஒத்திவைத்துள்ளதால் மானவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மருத்துவ படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டு வர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மாணவர்கள், பெற்றோர்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவம் போன்ற தொழில் முறை படிப்புகளில் நேர்மையான தொழில் முறையை தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். மாணவர்கள், அவர்களின் குடும்பங்களின் மனதில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications