திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வைத்த முக்கிய கோரிக்கை.. மொத்தம் 4 ட்வீட்கள்.. பரபரக்கும் களம்
அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்
சென்னை: நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும், இதற்காக தனிக் குழு அமைத்து ஆளுனர் மாளிகை, மத்திய அரசு ஆகியவற்றை தொடர்பு கொண்டு சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே முத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவர் கீர்த்திவாசன்... நன்றாக படிக்க கூடியவர்.. கடந்த 2 வருடங்களாக நடத்தப்பட்ட நீட் தேர்வுகளில் அவர் தேர்ச்சி பெறவில்லை.
அதனால் மனம் தளராமல் 2021 ஆகஸ்ட் மாதமும் நீட் தேர்வு எழுதினார்.. ரிசல்ட்டுக்காகவும் காத்திருந்தார். ஆனால், மற்றொருபுறம் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்ற மனஉளைச்சலும் கீர்த்திவாசனுக்கு இருந்துள்ளது..

மன உளைச்சல்
அதனால், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.. மாணவர் கீர்த்திவாசன் பள்ளியில் 2வது ரேங்க் வாங்குவார் என்றும், நீட் தேர்வு இந்த முறை நடக்காது என்றிருந்த நிலையில் திடீரென்று மத்திய அரசு தேர்வை அறிவித்ததால் சரியாக தயாராகாமல் இருந்தார், அதனாலேயே மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உறவினர்கள் காரணம் தெரிவித்தனர்.

இரங்கல்
அதுமட்டுமல்ல, கடந்த 3 வருடங்களாகவே வேறு எந்த கல்லூரிக்கும் செல்லாமல், நீட் தேர்வுக்கு மட்டுமே அவர் தயாராகி வந்ததாக கூறப்படுகிறது.. மன உளைச்சல் காரணமாக கீர்த்திவாசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் முத்தூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு புறம், மாணவனின் மரணத்துக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து, தங்கள் கருத்தக்களை கூறி வருகின்றனர்..

அன்புமணி
அந்த வகையில், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார். அதன்படி, நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றும் இதற்காக தனிக் குழு அமைத்து ஆளுனர் மாளிகை, மத்திய அரசு ஆகியவற்றை தொடர்பு கொண்டு சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அடுத்தடுத்து 4 ட்வீட்களை பதிவிட்டுள்ளார். அவை இதுதான்:

தோல்வி
1. பொள்ளாச்சியை அடுத்த முத்தூரைச் சேர்ந்த மாணவர் கீர்த்தி வாசன் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்!

தற்கொலை
2. மாணவர் கீர்த்தி வாசன் ஏற்கனவே 3 முறை நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. இம்முறையும் மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிபோய் விடுமோ? என்ற அச்சம் தான் அவரை தற்கொலைக்கு தூண்டியுள்ளது. மாணவர்களைக் காக்க நீட் ரத்து செய்யப்பட வேண்டும்!

விலக்கு
3. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது இன்னும் ஆளுனரின் ஒப்புதலைக் கூட பெறவில்லை. ஆளுனர் இனியும் தாமதிக்காமல் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்!

அன்புமணி ராமதாஸ்
4. நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும். இதற்காக தனிக் குழு அமைத்து ஆளுனர் மாளிகை, மத்திய அரசு ஆகியவற்றை தொடர்பு கொண்டு சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்
-
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications