மாணவி அனிதா நினைவு தினம்: நீட்டை ஒழித்து கட்டுவோம்.. அந்த நாள் நிச்சயம் வரும் - அமைச்சர் உதயநிதி
சென்னை: நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்த நாள் நிச்சயம் வரும். நீட்டை ஒழித்து கட்டுவோம் என்று மாணவி அனிதா நினைவு நாளை நினைவு கூர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. நீட் தேர்வினால் தமிழக ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவு சிதைக்கப்படுவதாகவும், இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கொடுக்க வேண்டும் தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது திமுக ஆட்சி அமைந்தால் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தீவிர பிரசாரம் மேற்கொண்டது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தேர்தல் பிரசாரத்தின் போது நீட்டை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியதாததால் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்வது தமிழகத்தையே உலுக்கி வருகிறது. இதனிடையே, கடந்த மாதம் 21 ஆம் தேதி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணா விரத அறப்போராட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று தரும் வரை ஓயமாட்டேன் எனக் கூறியிருந்தார். அதேபோல், நீட் தேர்விலிருந்து விலக்கு பெற ஒரு உதயநிதி போராடினால் போதாது இளைஞரணியில் உள்ள ஒவ்வொரு நிர்வாகியும் உதயநிதியாக மாறி போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். கடலூரில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் பேசும் போது அண்மையில் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற போது பலரும் நீங்கள் பங்கேற்றால் உங்கள் பதவிக்கு சிக்கல் வரும் எனக் கூறியதாகவும் ஆனால் பதவியை பற்றி தாம் பொருட்படுத்தவே இல்லை எனவும் தெரிவித்தார். இதனிடையே, நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து 2017 செப்டம்பர் 1ஆம் தேதி தனது உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அனிதாவின் நினைவு நாளான இன்று உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் இது குறித்த தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
மேலும் நீட் தேர்வை நிச்சயம் ஒழித்து கட்டுவோம் என சூளுரைத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதா நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு வருடங்கள் ஆறு ஆகின்றன. ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் தங்கை அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் என்றும் இருக்கும்.
நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக இறுதிவரை போராடிய தங்கை அனிதா மறைந்த இந்நாளில், ஓர் அண்ணனாக அவரை நினைவு கூர்கிறேன். நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்த நாள் நிச்சயம் வரும். நீட்டை ஒழித்து கட்டுவோம். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள்.. பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்! தர்மேந்திர பிரதான் உருக்கம்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு











Click it and Unblock the Notifications