சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புனேயில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி... பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Neet Exam Coaching : புனேயில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி- வீடியோ

    சென்னை: தனியாருக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களும் எளிதாக மருத்துவ படிப்பில் சேருவதற்கு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தங்கி இலவச நீட் தேர்வு பயிற்சி பெற தமிழக பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

    தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் பயின்ற ஒரு மாணவர் கூட நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்பிற்கு செல்லும் தகுதி பெற வில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.

    அரசு பள்ளிகளில் பயின்ற 2 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தனர்.. அதில் 4 மாணவர்கள் மட்டுமே 400 மதிப்பெண்களுக்கு மேல் நீட் தேர்வில் பெற்று இருந்ததாக அதிகாரிகள் கூறிருந்தனர்.

    அட கொடுமையே.. அட கொடுமையே.. "ரெட் லைட் ஏரியா கொண்டு வருவேன்".. செம வாக்குறுதி "செல்லம்"!

    2000 பேரில் ஒருவருக்கும் இடமில்லை

    2000 பேரில் ஒருவருக்கும் இடமில்லை

    ஆனால் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பேரில் ஒருவர் கூட அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெறும் அளவுக்கு மதிப்பெண் பெறவில்லை என்ற வேதனையான உண்மை வெளியாகி உளளது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

    அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

    இது ஒருபுறம் எனில், அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தனியார் பள்ளி மாணவர்களை போல் அதிக மதிப்பெண் பெற்று எம்பிபிஎஸ் சேரும் வகையில் புனேவில் சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.

    தக்‌ஷனா நிறுவனம் ஏற்பாடு

    தக்‌ஷனா நிறுவனம் ஏற்பாடு

    இதன்படி பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த அறிக்கையில், "2021ம் ஆண்டு நடைபெற உள்ள நீட் மற்றும் ஜேஇஇ போட்டி தேர்வுகளுக்கு 2019-20ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களை திறம்பட தயார் செய்வதற்காக ஓராண்டு பயிற்சியை புனேயில் உள்ள தக்‌ஷனா என்ற நிறுவனம் வழங்க உள்ளது.

    முற்றிலும் இலவசம்

    முற்றிலும் இலவசம்

    இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களாக இருக்கவேண்டும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு புனேவில் உள்ள தக்‌ஷனா நிறுவனத்தில் தங்கி பயில விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். உணவு, விடுதி வசதி, பயிற்சி கட்டணம் அனைத்தும் இலவசம்.

    டிசம்பர் 8ம் தேதி தேர்வு

    டிசம்பர் 8ம் தேதி தேர்வு

    மாணவர்களின் பெற்றோரிடமிருந்து விருப்ப கடிதத்தை அப்பள்ளி தலைமையாசிரியர் பெறவேண்டும். ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் என தேர்வு செய்து இம்மாதம் 22ம் தேதிக்குள் கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். டிசம்பர் 8ம் தேதி தக்‌ஷனா நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வு மூலம் மாணவர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த சுவரொட்டியை பள்ளி தகவல் பலகையில் வைக்கவேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    tamil nadu school education department announcement, NEET Training for Tamil Nadu Government School Students in Pune
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X