உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு... ராயபுரம் மனோ மனதை கரைக்கும் காங்கிரஸ்
சென்னை: வடசென்னை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்த ராயபுரம் மனோ கடந்த 15 நாட்களுக்கு முன்பு கட்சியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.
இதையடுத்து அவர் திமுகவில் இணையவுள்ளார் என கூறப்பட்ட நிலையில் இதுவரை எந்தக் கட்சியிலும் சேராமல் தனது தொழிலை மட்டும் கவனித்து வருகிறார்.
இந்நிலையில், ராயபுரம் மனோவிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னணி தலைவர்கள் பலர் பேசியதோடு, அவரை அவசரப்பட வேண்டாம் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

காங்கிரஸ்
வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ராயபுரம் மனோ தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தனது பகுதியில் நடத்தி கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தவர். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி என காங்கிரஸ் தலைவர்களின் பிறந்தநாளை கூட சொந்த செலவில் ஏற்பாடு செய்து பாரிமுனையில் இருந்து ராயபுரம் வரை கட்சிக்கொடி, தோரணம், விளக்கு என அசத்தி பொதுக்கூட்டம் போடுவார்.

அதிருப்தி
ராயபுரம் மனோவிடம் இருந்த பதவியை பறித்து திருநாவுக்கரசர் திரவியத்துக்கு அளித்தார். அப்போது முதலே அதிருப்தியில் இருந்தாலும் மனோ அதை வெளிக்காட்டாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கே.எஸ்.அழகிரியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கட்சியே வேண்டாம் என்ற முடிவை எடுத்து கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார்.

முடிவில்லை
இதையடுத்து ராயபுரம் மனோ திமுகவில் இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில், எந்தக் கட்சியிலும் இப்போது சேரும் எண்ணம் தமக்கில்லை எனத் தெரிவித்தார். இதனிடையே ராயபுரம் மனோ போன்ற தீவிர செயல்பாட்டாளர்களை கட்சியிலிருந்து விடக்கூடாது என எண்ணிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றோர் அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.

சிறந்த எதிர்காலம்
கடந்த வாரம் மனோவை அழைத்த மிக முக்கிய முன்னணி தலைவர் ஒருவர், உங்களுக்கு நம்ம கட்சியில் சிறந்த எதிர்காலம் இருக்கு, ஏன் அவசரப்படுகிறீர்கள், நான் சொல்வதை சிந்தித்து பார்த்து மீண்டு இணைந்து பணியாற்ற வாருங்கள் என கோரியுள்ளார். இருப்பினும் மனோ எந்த பதிலையும் அந்த தலைவருக்கு அளிக்கவில்லை.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications