குடும்பத்தினரே வேண்டாம் என்றாலும்.. கவின் ஆணவ கொலைக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கணும்! திருமாவளவன் கோரிக்கை
சென்னை: நெல்லையில் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டது மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இதற்கிடையே கவின் குடும்பத்தினர் இழப்பீடு வேண்டாம் எனச் சொன்னாலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு புதிய வீடு, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு சென்னை திரும்பிய திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சுர்ஜித் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தாயையும் கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தினார்.

திருமாவளவன்
அவர் மேலும் பேசுகையில், "கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் சுர்ஜித் மற்றும் தாய்- தந்தை பெயர்கள் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது . கொலை செய்த சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்திருக்கும் நிலையில், அவரது தாயைக் கைது செய்யத் தயக்கம் காட்டுவது ஏன்?
பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தனது கடமையை ஆற்றும் என நம்புகிறேன். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உள்ளது. சிபிசிஐடி போலீசார் கவின் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக சாதியவாத சக்திகளும், மதவாத சக்திகளும் சாதி பெருமிதத்தை அரசியலாக உயர்த்திப் பிடிக்கிறார்கள். இதுபோன்ற கொலைகளை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். வடமாநிலங்களில் நடந்த இதுபோன்ற கொலைகள் தமிழ்நாட்டில் நடப்பது வேதனை தருகிறது.
காரணம் என்ன!
சாதியவாத சக்திகளும் மதவாத சக்திகளும் திட்டமிட்டுச் செய்யும் சாதி பெருமை அரசியலே இதற்குப் பிரதான காரணம். இதைத் தடுக்க தேசிய அளவில் ஆணவ படுகொலை தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். ஜனநாயக சக்திகள் இது தொடர்பாகத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. இருப்பினும், மத்திய அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆணவக் கொலை குறித்துத் தடுப்பு சட்டம் இயக்கலாமா என மத்திய அரசு கருத்துக் கேட்டதற்கு, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கருத்துச் சொல்லாமல் உள்ளன. அது அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
இழப்பீடுகளைத் தர வேண்டும்
ஆணவக் கொலை விவகாரத்தில் மாநில அரசு செய்ய வேண்டிய கடமைகள் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களைத் தந்திருக்கின்றார்கள். வழக்குகளை எப்படிப் பதிவு செய்ய வேண்டும்.. எப்படி இழப்பீடுகளைத் தர வேண்டும்... போலீசார் உடனடியாக செய்ய வேண்டியது குறித்து வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
அதன்படி கவின் கொலைக்கு இழப்பீடு வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் மறுத்தாலும் இழப்பீடு வழங்க வேண்டும். புதிய வீடு, 5 ஏக்கர் நிலம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, 12.5 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றுடன் குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
சட்டம் மட்டும் போதுமா?
ஆணவ படுகொலைகளை வெறும் சட்டத்தால் மட்டும் தடுத்துவிட முடியுமா என்ற கேள்விக்கு அவர், "சட்டம் என்பது ஒரு தடுப்பு நடவடிக்கை. அதுவே இல்லை என்பதே வேதனை. சட்டம் இருந்தால் உளவியல் ரீதியாக ஒரு தயக்கம் இருக்கும். சட்டம் இல்லாததால் தான் இதுபோன்ற கொலைகள் நடக்கிறது. இதைத் தேசிய அவமானமாகக் கருத வேண்டும். பெற்ற பிள்ளைகளையே கொல்லும் அளவுக்குச் செல்கிறார்கள் என்றால் சாதி எந்தளவுக்கு ஒரு மனநோயாக இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் உடனடியாக ஆணவ படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும்" என்றார்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications