அம்மாசியப்பன் ஆளுநருக்கே ஷாக் கொடுத்துட்டாரே.. நிச்சயம் நீட் விலக்கு கிடைக்கும் - நெல்லை முபாரக்
சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட நீட் எனப்படும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு எதிராக பாஜகவை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முந்தைய அதிமுக ஆட்சியிலும், தற்போதைய திமுக ஆட்சியிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது திமுக அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் சாதித்த மாணவர்கள், பெற்றோருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடிய நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
இதில் அம்மாசியப்பன் என்ற பெற்றோர் எழுந்து ஆளுநரிடம் நீட் தேர்வுக்கு எப்போது விலக்களிப்பீர்கள் என்று கேட்க, ஆளுநர் ரவியோ, நீட் தேர்வுக்கு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர மாட்டேன் என்று பதிலளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் பேஸ்புக்கில் பதிவிட்டு இருப்பதாவது, "சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது சேலத்தை சேர்ந்த மாணவியின் தந்தை நீட் தேர்வு பயிற்சிக்காக தனது மகளுக்கு 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும், வசதி இருக்கும் தன்னால் அந்த செலவை செய்ய முடிந்தது.
அதேவேளையில் மருத்துவக் கல்வி கனவுடன் இருக்கும் மாணவர்களின் வசதியில்லாத பெற்றோர்களால் அதனை செய்ய முடியுமா? என்று கேட்டு, எப்போது நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திடுவீர்கள் என கேட்டுள்ளார்.
எல்லோரும் நீட் தேர்வு குறித்து பெருமையாகவே பேசுவார்கள் என்று எதிர்பார்த்த வேளையில், இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஆளுநர் மாளிகை அதிகாரிகள் அந்த பெற்றோரிடமிருந்து மைக்கை வலுக்கட்டாயமாக பறித்துள்ளனர். இதற்கு பதிலளித்து பேசிய ஆளுநர், ஒருபோதும் தான் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என தெரிவித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு மற்றும் பாஜக தவிர்த்த அனைத்துக் கட்சிகள் மற்றும் தமிழக மக்கள் நீட் தேர்வு எனும் நிறுவனக் கொள்ளை தேர்வை எதிர்க்கும் நிலையில், மாநில அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய ஆளுநர், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என கூறுவது ஆணவத்தின் உச்சம். இந்த ஆணவத்தை தமிழகம் நிச்சயம் வீழ்த்தும். நீட் விலக்கை அடைந்தே தீரும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
நீட் வினாத்தாளுடன் தூத்துக்குடி சென்ற வாகனம்.. நடு வழியில் நின்றதால் பரபரப்பு.. இரவில் நடந்தது என்ன? -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications