வாழ்க்கையில் போலீஸ் கிட்ட பேசுனதே இல்லை.. ஏன் இப்படி பண்றீங்க! நெல்சன் திலீப்குமாருக்கு வந்த கோபம்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் குறித்து தன்னிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதாக வெளியான தகவலை பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமாரிடம் மறுத்துள்ளார். மேலும், இதுவரை என் வாழ்நாளில் காவல்துறையிடம் இருந்து போனிலோ, நேரிலோ எந்த அழைப்பும் வந்தது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஆர்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, ஹரிதரன், இது போன்றவர்கள் மட்டுமல்லாது அதிமுக, திமுக, பாஜக, தாமாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அது மட்டும் அல்லாமல் சீசிங் ராஜா, சம்போ செந்தில் உள்ளிட்ட பல பயங்கர ரவுடி கும்பல்கள் ஒன்றாக சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றி இருக்கிறது. குறிப்பாக இந்த கொலை வழக்கில் சிசிங் ராஜா, சம்பா செந்தில் ஆகியோர் தலைமறைவாக இருக்கின்றனர் என்கின்றனர் போலீசார். இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பவம் செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனும் தலைமறைவானார். வழக்கறிஞரான இவர், தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரௌடி மொட்டை கிருஷ்ணனுடன் தொடர்பில் இருந்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் மனைவியான மோனிஷாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மொட்டை கிருஷ்ணனுடன் தொடர்ந்து பலமுறை மோனிஷா தொலைபேசியில் பேசியிருக்கிறார். இதை அடுத்து அதனை கண்டறிந்த போலீசார் அவரை நேரில் வரவழைத்து எதற்காக பேசினீர்கள்? எத்தனை முறை பேசி இருக்கிறீர்கள்? என விசாரித்ததாகக் கூறப்படுகிறது.
இதை அடுத்து இது தொடர்பாக மோனிஷாவின் கணவரும் இயக்குனருமான நெல்சனிடம் போலீசார் விசாரணை நடத்த இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குனர் நெல்சன் திலீப் குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது.
ஏற்கனவே மோனிஷாவிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அதே கேள்விகள் மற்றும் அது தொடர்புடைய கேள்விகள் நெல்சனிடம் கேட்கப்பட்டதாகவும், ஆனால் நெல்சன் அளித்த வாக்குமூலம் மற்றும் விளக்கம் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் சுமார் ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் குறித்து பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதாக வெளியான தகவலை அவரே மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில்," பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தம்மிடம் போலீஸ் விசாரணை நடத்தியதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது. தம்மிடம் போலீஸ் விசாரணை நடத்தியதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது.
காவல்துறை தரப்பில் இருந்து தமக்கு எந்த சம்மனும் அனுப்பப்படவில்லை. தம்மிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. காவல்துறையின் எந்த அதிகாரியிடம் இந்த விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது. இதுவரை என் வாழ்நாளில் காவல்துறையிடம் இருந்து போனிலோ, நேரிலோ எந்த அழைப்பும் வந்தது இல்லை. எனவே தகவலின் உண்மை தன்மையை அறிந்து யாராக இருந்தாலும் செய்தி வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications