ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்தது நான் தான்! சிறுநீரகவியல் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் 'பளிச்'
ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்தது ஏன் என சிறுநீரகவியல் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் விளக்கம்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு போக வேண்டாம் என கூறியது நான் தான் என பிரபல சிறுநீரகவியல் மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
உடல்நலமா? அரசியலா? என ரஜினிக்கு 2 ஆப்ஷன்களை தாம் கொடுத்ததாகவும், உடல்நலம் தான் முக்கியம் என்பதால் அவர் அரசியலுக்கு வரும் எண்ணத்தை மாற்றிக் கொண்டதாக கூறியுள்ளார்.
இப்போதும் ரஜினி தன்னிடம் ரெகுலர் செக்அப்களுக்கு வருவதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

சிறுநீரகவியல் மருத்துவர்
ரஜினிகாந்துக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு நோய் தடுப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்றும் இதனால் தான் இதோடு கூட்டங்களுக்கும், பொதுவிடங்களுக்கும் சென்றால் உயிருக்கே ஆபத்தான சூழல் கூட வரலாம் என தாம் எச்சரித்ததாக மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். ஒர்க் ஃப்ரம் ஹோம் என்பது ஐடி நிறுவனங்களுக்கு தான் பொருந்துமே தவிர அது அரசியலில் எடுபடாது எனத் தெரிவித்தார்.

உடல்நலமா? அரசியலா?
இதனால் தான் ரஜினிகாந்தை அரசியலுக்கு போக வேண்டாம் என தாம் அழுத்தமாக வலியுறுத்தியதாக அவருக்கு சிறுநீரகவியல் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். உடல்நலமா? அரசியலா? என ரஜினிக்கு 2 ஆப்ஷன்களை தாம் கொடுத்ததாகவும், உடல்நலம் தான் முக்கியம் என்பதை உணர்ந்ததால் அரசியல் பிரவேச எண்ணத்தை ரஜினி கைவிட்டார் எனத் தெரிவித்தார்.

ரஜினி ரசிகர்கள்
உண்மையை சொல்வதற்கு எதற்கு தயங்க வேண்டும் என்றும் ரஜினிகாந்தின் உயிருக்கு ஆபத்து வரும் என்றால் அவருடைய ரசிகர்கள் கவலைப்பட மாட்டார்களா அதனால் தான் அவரை அரசியலுக்கு செல்ல வேண்டாம் என கூறினேன் எனவும் அவர் ஒப்புக்கொண்டார். யோசித்து யோசித்து பார்த்து வேறு வழியே இல்லை என்பதால் தான் தாம் இப்படி கூறியதாகவும் ரஜினியை பொறுத்தவரை அவர் மிகவும் கூர்மையானவர் என்றும் அவரே சிந்தித்து முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார்.

ரெகுலர் செக் அப்
இதனிடையே இப்போதும் ரஜினி தன்னிடம் ரெகுலர் செக்அப்களுக்கு வருவதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார். சென்னையில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications